Close

அனைவருக்கும் கல்வி இயக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் ஈரோடு மாவட்டம்

1. புதிய கற்றல் முறை , எளிய படைப்பாற்றல் கல்வி முறை 2017-18

1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிய கற்றல் முறையில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. 2018-19 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கற்றல் முறைக்கான பாடப்புத்தகங்கள் 1187 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2,3,4 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான ஆசிரியர் கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது. 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய படைப்பற்றால் கல்வி முறையில் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை மேம்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளது.

படைப்பாற்றல் கல்வி முறை 2017-18

அனைவருக்கும் கல்வி இயக்கம் ஈரோடு மாவட்டம், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 502 பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் படைப்பாற்றல் கல்வி முறையில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. 304 கணித உபகரணப்பெட்டிகள் மற்றும் 304 அறிவியல் உபகரணப்பெட்டிகள் அனைத்து நடுநிலைப்பள்ளிகளுக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வழங்கப்பட்டுள்ளது. இதுசார்ந்த அனைத்து பயிற்சிகளும் உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2. தகவல் அமைப்பு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் அடிப்படைக் கல்வி உரிமை விதிகள் 2011 ன்படி குடியிருப்பிலிருந்து 1 கி.மீ தொலைவிற்குள் தொடக்கப்பள்ளிகள் நிறுவிடவும், 3 கி.மீ தொலைவிற்குள் நடுநிலைப்பள்ளிகள் நிறுவிடவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் புவியியல் தகவல் வரைபட முகவை (ழுஐளு)உருவாக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், பஞ்சாயத்துக்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அனைத்து பள்ளிகளையும் உள்ளடக்கி தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 படி ஒரு குடியிருப்பிலிருந்து 1 கிமீ. தொலைவில் தொடக்கப்பள்ளிகளும், 3 கி.மீ தொலைவில் உயர் தொடக்கநிலை பள்ளிகளும் இருத்தல் வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் 3991 குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இதில் 146 குடியிருப்புப்பகுதிகளில் தொடக்கப்பள்ளிகள் இல்லா குடியிருப்பாகவும், 41 குடியிருப்புகளில் நடுநிலைப்பள்ளிகள் இல்லா குடியிருப்பாகவும் கண்டறியப்பட்டுள்ளது.