Close

மாவட்டம் பற்றி

ஈரோடு மாவட்டம் கோயமுத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இம்மாவட்டத்தின் முன்வரலாறு கோயமுத்தூர் மாவட்டத்துடன் பின்னிப்பினைந்துள்ளது.  ஈரோடு மாவட்டத்திற்கு என தனியே வரலாற்றினை பிரித்துப் பரர்ப்பது மிகவும் கடினமானதாகவே இருக்கும்.  ஈரோடு மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்கள் இணைந்த நிலப்பகுதி முற்காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.  கொங்கு மண்டலம் வரலாறு சங்ககால வரலாற்றுடன் இணைந்ததாகும்.  முற்காலத்தில், இந்த நிலப்பகுதி மலைவாழ் மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்துள்ளது.  இவர்களில் மிக முக்கியமானவர்கள் “கோசார்கள்” இவார்களது தலைநகரமாக கோசம்புத்தூர் இருந்து வந்துள்ளது.  கோசம்புத்தூர் என்பது நாளாவட்டத்தில் கோயம்புத்தூராக அழைக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது.  இம்மலைவாழ் மக்கள் ராஷ்டிரார்களால் தோற்கடிக்கப்பட்டனார்.  ராஷ்டிரர்களிடமிருந்த இப்பகுதி ராஜராஜ சோழர் ஆட்சிக்காலத்தில் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது.  சோழ சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்த பின்னர் கொங்கு மண்டலம் சாளுக்கியார்கள் வசமும், பாண்டியார்கள், ஹெய்ச்சாளர்கள் ஆகியோர்களின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளது.  மேலும் வாசிக்க

District Collector Erode
திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப
Control room helpline Tamil photo

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: ஈரோடு
தலையகம்: ஈரோடு
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 5722 ச.கி.மீ
ஊரகம்: 5031.36 ச.கி.மீ
நகர்புறம்: 690.64 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்: 22,51,744
ஆண்கள்: 11,29,868
பெண்கள்: 11,21,876