Close

மாவட்டம் பற்றி

ஈரோடு மாவட்டம் கோயமுத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இம்மாவட்டத்தின் முன்வரலாறு கோயமுத்தூர் மாவட்டத்துடன் பின்னிப்பினைந்துள்ளது.  ஈரோடு மாவட்டத்திற்கு என தனியே வரலாற்றினை பிரித்துப் பரர்ப்பது மிகவும் கடினமானதாகவே இருக்கும்.  ஈரோடு மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்கள் இணைந்த நிலப்பகுதி முற்காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.  கொங்கு மண்டலம் வரலாறு சங்ககால வரலாற்றுடன் இணைந்ததாகும்.  முற்காலத்தில், இந்த நிலப்பகுதி மலைவாழ் மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்துள்ளது.  இவர்களில் மிக முக்கியமானவர்கள் “கோசார்கள்” இவார்களது தலைநகரமாக கோசம்புத்தூர் இருந்து வந்துள்ளது.  கோசம்புத்தூர் என்பது நாளாவட்டத்தில் கோயம்புத்தூராக அழைக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது.    மேலும் வாசிக்க

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: ஈரோடு
தலையகம்: ஈரோடு
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 5722 ச.கி.மீ
ஊரகம்: 5031.36 ச.கி.மீ
நகர்புறம்: 690.64 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்: 22,51,744
ஆண்கள்: 11,29,868
பெண்கள்: 11,21,876