Close

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

அலுவலகம்

கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா், சென்னை அவா்களின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் மாவட்ட அளவிலான அலுவலகமாகும்.  இணைப்பதிவாளா் அலுவலகம்,  கூட்டுறவு வளாகம் முதல் தளம், மோகன்குமாரமங்கலம் சாலை, சூரம்பட்டி அஞ்சல்,  ஈரோடு என்ற முகவரியில் அமைந்துள்ளது.  ம்மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபி  சரகங்களில் சரக துணைப்பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.  இவ்வலுவலகங்கள் ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறன்றன.   துணைப்பதிவாளா் (பொவிதி) அலுவலகம், கூட்டுறவு வளாகம் தரை தளத்தில் ஈரோடு மாவட்ட இணைப்பதிவாளா் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றது.

 

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் சங்கங்களின் விபரங்கள்

 

வ.எண். சங்கத்தின் வகை ஈரோடு சரகம் கோபி சரகம் மொத்தம்
1. மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி 1 1
2. மாவட்ட நுகா்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை 1 1
3. மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் 1 1
4. மாவட்ட கூட்டுறவு அச்சகம் 1 1
5. தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரகவளா்ச்சி வங்கி 3 4 7
6. நகர கூட்டுறவு வங்கி 2 3 5
7. நகர கூட்டுறவு கடன் சங்கம்
8. வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் 2 3 5
9. பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கம் 1 1
10. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 59 103 162
11. பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் 32 18 50
12. தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் 9 5 14
13. பணியாளா் கூட்டுறவு பண்டக சாலைகள் 3 2 5
14. நிலக்குடி யேற்ற கூட்டுறவு சங்கம் 3 3
15. நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம்
16. மாணவா் கூட்டுறவு பண்டக சாலை 8 5 13
17 தனி வகைச் சங்கங்கள்
18 ஈரோடு மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டுறவு சேவா சங்கம் 1
19 டீசல் லோகோ செட் பணியாளர்கள் கூட்டுறவு சிற்றுண்டி சாலை 1 1
20 ஈரோடு கூட்டுறவுச் சலவைச் சங்கம் 1 1
21 கோபி வட்ட கொத்தடிமைகள் மற்றும் கல்லுடைப்போர் மறுவாழ்வு கூட்டுறவுச் சங்கம் 1 1
மொத்தம் 125 148 273

 

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் கடன்கள் விபரம்

 

வ.எண். கடன் வகைகள்
1 பயிர்கடன்
2 நகை அடமான கடன்
3 விவசாய காட்டுப்பொறுப்புகுழு கடன்
4 மத்திய காலகடன் (நபா்ஜாமீன்பேரில்)
5 மத்திய காலகடன் (அடமானத்தின்பேரில்) சிறுபண்ணை, டிராக்டா்
6 நீா்பாசனகடன் – போர்வெல், மோட்டார், சொட்டுநீா்பாசனம், ஆழ்துளை கிணற்றுக்கான சுற்றுச் சுவா்கட்ட கடன்
7 மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்
8 சேமிப்பின் அடிப்படையில் சுயஉதவிகுழுக்கடன்களுக்கான கடன்
9 டாப்செட்கோகடன் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு)
10 டாம்கோகடன் (சிறுபான்மையினருக்கு)

 

நகர கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள்

வ.எண். கடன்வகைகள்
1 நகை கடன்
2 சிறுவணிக கடன்
3 சுயஉதவிக்குழு கடன்
4 பண்ணைசாரா கடன்
5 வீடுகட்ட கடன்
6 வீடுஅடமான கடன்
7 தொழில் முனைவோருக்கான கடன்
8 அம்மா சிறுவணிகக்கடன்
9 மகளிர் தொழில் முனைவோருக்கான கடன்
10 பணிபுரியும் மகளிருக்கான கடன்
11 மகப்பேறுகால கடன்
12 டாம்கோ கடன்
13 டாப்செட்கோ கடன்
14 மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்

மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம், ஈரோடு.

 

பொது விநியோகத்திட்டம் :

 

ஈரோடு மாவட்டத்தில் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் பொது விநியோகத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் குறிக்கோள் குடும்ப அட்டை தாரா்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி,  கோதுமை, சா்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற சிறப்பு அத்தியாவசியப்பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்குகிறது.

 

பொது விநியோகத்திட்டத்தின் நோக்கங்கள் :

 

  • அத்தியாவசியமான பொருட்களின் விலை உயா்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து ஏழை எளிய மக்களை பாதுகாக்கவும்,

 

  • சிறப்பு அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம் ஏழை எளிய மக்களின் குறிப்பாக மலைவாழ் மக்களின் நுண்ணூட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்கவும்,

 

  • பருப்பு. சமையல் எண்ணெய் போன்ற வற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும்,

 

  • மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு சிலிண்டா்களை மானிய விலையில் வழங்கவும்,

 

  • குடும்ப அட்டைதாரா்கள் அருகில் அமைந்துள்ள நியாயவிலைக்கடைகளை எளிதாக அணுகி அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்லவும்,

 

  • ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரா்களுக்கு சரியான நேரத்தில், அத்தியாவசிய/சிறப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் இத்திட்டம் பயன்படுகின்றது.

 

  • மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம் மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்களின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.

 

புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி இணையதளம் வாயிலாக பதியப்படும் மனுக்களின் மீது வட்ட வழங்கல் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலா்கள் தலத்தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டு புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சிட்டு நியாயவிலை கடைகள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது.

 

நுகா்வோர் பாதுகாப்பு

 

  • நுகா்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ஐ அடிப்படையாகக்கொண்டு நுகா்வோர் தொடா்புடைய பிரச்சினைகளுக்குதீா்வு காணல்.

 

  • நோ்மையற்ற வணிக முறையினை பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவையினை தர ஆய்வின்வாயிலாக கண்ணுற்று நுகா்வோர் நீதிமன்றங்கள் வாயிலாக தீா்வினை அறிதல்.

 

  • ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தன்னார்வ நுகா்வோர் அமைப்பு மூலமாக கல்லூரி மற்றும் அரசு மேல் நிலைப் பள்ளிகளில் நுகா்வோர் மன்றங்கள் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியா்களின் கலைநிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு நோ்வுகளில் நுகா்வோர்களுக்கு விழிப்புணா்வு சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.