பிரிவு பற்றி
விதைச்சான்றளிப்பு என்பது விதை உற்பத்தி மற்றும் தரத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும்.
மத்திய மைய அரசால் அறிவிக்கப்பட்ட பயிர் ரகங்களில் உயர்தரமான விதைகள் உற்பத்தி செய்து சான்றளிப்பின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதை விதை சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும். சான்று விதை சிறப்பான பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் நிலையை மேம்படுத்தும் ஒரு கருவியாகும்.
உயிர்மச்சான்றளிப்பு துறையின் கீழ் உயிர்ம விளை பொருள் உற்பத்தி, உயிர்ம விளை பொருள் பதனிடுவோர் மற்றும் உயிர்ம விளை பொருட்கள் விற்பனை செய்வோருக்கு அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் சான்று வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் உயிர்ம சான்று பெற்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவியுடன் உயிர்ம விளைப் பொருட்களில் எஞ்சிய நச்சு பகுப்பாய்விற்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன.
பார்வை
விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறை கீழ்க்கண்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
- விதைச்சான்று
- விதை சட்ட அமலாக்கம்
- விதை பரிசோதனை
- பயிற்சி
- உயிர்மச்சான்றளிப்பு
குறிக்கோள்கள்
சான்று விதைகளை விதைப்புக்கு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
- நல்ல முளைப்புத் திறன்.
- தேவையான பயிர் எண்ணிக்கை.
- சீரான பயிர் வளர்ச்சி.
- ஒரே நேரத்தில் பூத்து முதிரும்.
- ஒரே நேரத்தில் அறுவடை செய்யலாம்.
- கலப்படம் இல்லாத அதிக மகசூல்.
- விலை பொருளுக்கு நியாயமான விலை கிடைக்கும்.
துறையின் அமைப்பு
விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு இயக்குநர், சென்னை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு இணை இயக்குநர், சென்னை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர், ஈரோடு.
ஈரோடு மாவட்ட துறை அமைப்பு
| வ. எண் | பதவி | தலைமையிடம் |
| 1 | விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் | ஈரோடு மாவட்டம் |
| 2 | விதைச்சான்றளிப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) | ஈரோடு |
| 3 | விதைச்சான்றளிப்பு அலுவலர் | ஈரோடு |
| 4 | விதைச்சான்றளிப்பு அலுவலர் | பெருந்துறை |
| 5 | விதைச்சான்றளிப்பு அலுவலர் | பவானி |
| 6 | விதைச்சான்றளிப்பு அலுவலர் | அம்மாபேட்டை |
| 7 | விதைச்சான்றளிப்பு அலுவலர் | கோபிசெட்டிபாளையம்-1 |
| 8 | விதைச்சான்றளிப்பு அலுவலர் | கோபிசெட்டிபாளையம்-2 |
| 9 | விதைச்சான்றளிப்பு அலுவலர் | சத்தியமங்கலம் |
| 10 | விதைச்சான்றளிப்பு அலுவலர் | பவானிசாகர் |
| 11 | உயிர்மச்சான்று ஆய்வாளர் | ஈரோடு |
இணைய இணைப்புகள்
https://seedtrace.gov.in/ms014/ro/dashboard
https://seedcertification.tn.gov.in/seed/login/login.php
https://pgsindia-ncof.gov.in
https://apeda.gov.in/tracenet