Close

பணியாளர் செவிலியர் ஆட்சேர்ப்பு 2026 – விண்ணப்பங்கள் பரிசீலனை மற்றும் குறைபாடுள்ள ஆவணங்கள் சமர்ப்பிப்பு தொடர்பான அறிவிப்பு

பணியாளர் செவிலியர் ஆட்சேர்ப்பு 2026 – விண்ணப்பங்கள் பரிசீலனை மற்றும் குறைபாடுள்ள ஆவணங்கள் சமர்ப்பிப்பு தொடர்பான அறிவிப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
பணியாளர் செவிலியர் ஆட்சேர்ப்பு 2026 – விண்ணப்பங்கள் பரிசீலனை மற்றும் குறைபாடுள்ள ஆவணங்கள் சமர்ப்பிப்பு தொடர்பான அறிவிப்பு


12.09.2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி

பணியாளர் செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பிற்குப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 762 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 61 விண்ணப்பங்கள் தகுதியற்றதாகக் கண்டறியப்பட்டன.

மீதமுள்ள 701 விண்ணப்பங்களில்:

  • 366 விண்ணப்பங்கள் தேவையான அனைத்து சான்றிதழ்கள் மற்றும் ஆதார ஆவணங்களுடன் முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
  • 335 விண்ணப்பங்கள் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆதார ஆவணங்கள் முழுமையாக இணைக்கப்படாமல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயருக்கு எதிராக தேவையான சான்றிதழ்கள் அல்லது ஆவணங்கள் குறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களது பெயருக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள குறைவான சான்றிதழ்கள் / ஆவணங்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 03.10.2026 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்:

  • 0424-2431020
  • 87544 48477

சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட சுகாதார அலுவலகம்,
திண்டல்,
ஈரோடு – 12.

01/10/2026 03/10/2026 பார்க்க (74 KB) Missing Document List (118 KB)