ஈரோடு மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் (DCCM) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு-21.10.2026
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஈரோடு மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் (DCCM) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு-21.10.2026 | தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் (DCCM) ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 22,000 ஆகும். பணிக்காலம் 19 மாதங்கள் ஆகும். தொடர்புடைய துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சுத் திறன் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் தயாரித்தல், கூட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை 29.10.2026-க்குள் மின்னஞ்சல் (dmuerd@gmail.com) மூலமாகவோ அல்லது நேரிலோ (முகவரி: மாவட்ட வன அலுவலர், ரோஜா நகர், பெரியசேமூர், ஈரோடு – 638 004) சமர்ப்பிக்கலாம் |
21/10/2026 | 29/10/2026 | பார்க்க (212 KB) Application (135 KB) |