“ஆட்சியர் மடல்”– மாவட்ட ஆட்சியரின் உரை
"ஆட்சியர் மடல்" என்பது மாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட்ட ஓர் உத்தியோகபூர்வமான தொடர்பு முயற்சி ஆகும். இந்தக் கடிதத் தொடர் வழியாக, அரசு திட்டங்கள், மாவட்ட நிர்வாக முயற்சிகள், சமூக நலத் திட்டங்கள் மற்றும் மாவட்டத்திற்குள் நிகழும் முக்கிய சாதனைகள் ஆகியவை பொதுமக்களுடன் நேரடியாக பகிரப்படுகின்றன. இந்த முயற்சி, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, மக்களது பங்கேற்பு மற்றும் அரசு–மக்கள் உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
| வ.எண் | தலைப்பு | குறிப்பு | தேதி | பார்க்க |
|---|---|---|---|---|
| 1 | ஒற்றுமையின் வெற்றி | ஒன்றாய் பலரும் ஒருங்கிணைந்து சங்கமாகி நன்றாய் பலவகை நோக்கத்தை - வென்றெடுப்போம். வீட்டிற்கும் நாட்டிற்கும் உன்னத வாழ்வளிக்கும் கூட்டுறவை கொள்கையாய் கொண்டு. |
09-08-2025 | View/Download |
| 2 | புத்தகத்தை வாசிப்போம் ! புத்தகத்தை நேசிப்போம்! | புத்தகத்தை நேசிப்பாய் ! புத்தகத்தை வாசிப்பாய்! புத்தகத்தை தேடிப் படித்தவரே - வித்தகராய் வாழ்வதனை கண்டுநீயும் வாசிப்பைத் தேர்ந்திட்டால் ஆள்பவராய் ஆவாய் அறி. |
25-08-2025 | View/Download |
| 3 | ஊரைச்சுற்றியும் பார்க்கலாம்! வேரைப் பற்றியும் அறியலாம்! | மண்ணின் மரபையும் மாண்பையும் நாமறிந்து கண்ணின் மணிபோலக் காத்திடுவோம் - பண்ணில் அமைத்துபுகழ் பாடிடுவோம்; அன்பாலொன் றாகி சமைத்திடுவோம் பொன்னாட்டைச் சேர்ந்து. |
04-10-2025 | View/Download |
| 4 | எலத்தூர் குளத்திற்கு வாருங்கள்! இயற்கை எழிலைக் பாருங்கள்! | எலத்தூர் குளத்தின் எழில் காண வாரீர் ! நிலத்தொடு நீரில் இயற்கை – நலத்தொடு வாழும் உயிர்பன் மயசூழல் கண்டு மாந்தர் வாழும் வகையுணர்வ தற்கு. |
10-10-2025 | View/Download |