Close

விற்பனைக்குழு

எங்களைப் பற்றி

ஈரோடு விற்பனைக்குழு, தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டம் 1987 மற்றும் அதன் விதிகள் 1991- ஐ அமல்படுத்துவதன் மூலம் அறிக்கையிடப்பட்ட வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனையினை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வேளாண் சந்தைகளின் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்கிறது.

ஈரோடு விற்பனைக்குழு 18 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மற்றும் 2 துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் ஏல முறையில் வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துகிறது. தேசிய அளவிலான மின்னணு வேளாண் வர்த்தக தளமான e-NAM பயன்படுத்தப்படுகிறது. இது நியாயமான, வெளிப்படையான மற்றும் திறமையான சந்தை செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதோடு, விவசாயிகளுக்கு போட்டித்தன்மை கொண்ட லாபகரமான விலையினையும், வர்த்தகர்களுக்கு ஒரே இடத்தில் தரமான விளைபொருட்களை அணுகும் வசதியினையும் வழங்குகிறது.

மேலும், ஈரோடு விற்பனைக்குழுவின்  ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நவீன சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன கிடங்கு வசதிகள் மற்றும் சேமித்து வைக்கப்பட்ட விளைபொருட்களுக்கு ஏற்ப விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது.  நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதில் வலுவான கவனம் செலுத்தி, ஈரோடு   மாவட்டம் முழுவதும் அவசர விறக்கத்தை (distress selling) குறைப்பதற்கும், வேளாண் சந்தைப்படுத்தல் சுற்றுச்சூழலை வலுப்படுத்துவதற்கும் பாடுபடுகிறது.

நோக்கம் :  விவசாயி மையப்படுத்தப்பட்ட, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் சந்தைப்படுத்தல் சூழலை உருவாக்குவது – இது போட்டி போட்டி டெண்டர் முறை மூலம் நியாயமான விலை நிர்ணயத்தை உறுதி செய்யும், இழப்புகளைக் குறைக்கும், மற்றும் நவீன உள்கட்டமைப்பு மற்றும் திறமையான சந்தை நடைமுறைகள் மூலம் மதிப்பை உயர்த்தும்.

குறிக்கோள் : ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் விளைபொருட்களின் சந்தைகளை முறைப்படுத்துதல்,  வெளிப்படையான இ-நாம் வர்த்தகம், நவீன சேமிப்பு கிடங்கு வசதிகள் மற்றும் வேளாண் விளைபொருட்களின் விலை நிர்ணயத்தை உறுதி செய்தல், விவசாயிகளின் இழப்புகளை குறைத்து கிராம வளர்ச்சியை ஊக்குவித்தல்.

நிர்வாக அமைப்பு :

ஈரோடு விற்பனைக்குழு, தலையலுவலகம்   :  வேளாண்மை துணை இயக்குநர் / செயலாளர்,  கண்காணிப்பாளர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் :  விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர்கள்,  மேற்பார்வையாளர் மற்றும் இதரப் பணியாளர்கள்

அமைப்பு  விவரம் :

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் பெயர்கள்

ஈரோடு, அவல்பூந்துறை, அந்தியூர், பூதப்பாடி, கோபிசெட்டிபாளையம், மைலம்பாடி, பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி, கொடுமுடி, நம்பியூர், பெருந்துறை, புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், சிவகிரி, தாளவாடி, வெள்ளாங்கோவில் மற்றும் எழுமாத்தூர்.

தொடர்பு விவரம் :

விவரம் மின்னஞ்சல் தொலைபேசி எண்
தலைமையலுவலகம் rmc.erode@gmail.com 0424 – 2339102
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் erodesupdt@gmail.com 0424-2556322
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் avalpoondurairm@gmail.com 0424-2331279
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் rmanthiyur@gmail.com 04256-260265
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் rmboothapadi@gmail.com 04256-227070
கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் rm.gobichettipalayam@gmail.com 04285-222278
மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் rmmylambady@gmail.com
பவானி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் rmbhavaniemc@gmail.com
சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் chithoderm@gmail.com 0424-2533223
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் rmckavindapadi@gmail.com 04256-298856
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் kodumudirm@gmail.com 04204-224297
நம்பியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் nambiyurrm@gmail.com
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் perundurairm@gmail.com 04294-220512
புஞ்சைபுளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் punjaipuliampattyrm@gmail.com
சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் rmcsathyamangalam@gmail.com 04295-233346
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் sivagirirm@gmail.com 04204-240380
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் thalavadirm@gmail.com 04295-245241
வெள்ளாங்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் vellankoilrm@gmail.com
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் elumathurrm@gmail.com

திட்டம்

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் ( e-NAM)

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிகவிலை கிடைத்து தங்களது வருவாயினை உயர்த்திடும் வகையில் மின்னணு தேசிய வேளாண் சந்தைத்திட்டம் e-NAM (electronic – National Agriculture Market ) 2016  ஆம் ஆண்டு மத்திய அரசால் தெடங்கி வைக்கப்பட்டது. நாடெங்கிலும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இத்திட்டத்தின்படி மின்னணு வர்த்தகத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை தேசிய அளவிலான சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவாயினை பெருக்கிடவும், நாடெங்கிலும் உள்ள வர்த்தகர்கள் தங்களுக்கு கட்டுப்பாடியாகக் கூடிய விலையில் வாங்கும் வகையிலும் தேசிய வேளாண் சந்தை எனும் மின்னணு வர்த்தக முறையினை தமிழ்நாட்டில் 213 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும் இந்திய அளவில் மொத்தம் 1522 வேளாண் சந்தைகளும் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில்  (e-NAM)  இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு விற்பனைக்குழுவில் 18 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும்  இத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு  பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆவணங்கள் :

Annual Report 2024-2025

Schemes

Functional Guidelines

தகவல் அறியும் உரிமை :

பொது தகவல் அலுவலர்

திருமதி.ச.நித்யாதேவி,

பொது தகவல் அலுவலர்/ மேலாளர்,

ஈரோடு விற்பனைக்குழு,

233 வித்யா நகர்,  திண்டல்

ஈரோடு – 638 012.

தொலைபேசி : 0424 – 2339102

மேல்முறையீட்டு அலுவலர்

வேளாண்மை துணை இயக்குநர் / செயலாளர்,

ஈரோடு விற்பனைக்குழு,

233 வித்யா நகர்,  திண்டல்

ஈரோடு – 638 012.

தொலைபேசி : 0424 – 2339102

இணையதளம்  :     agrimark.tn.gov.in