Close

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

செயல்பாடுகள்

ஆதிதிராவிடர் மக்கள் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தின் விளிம்பில் உள்ளனர். அதிகமான குடும்பங்கள் வசதி வாய்ப்புகள் இன்றி உள்ளதோடு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டும் வழிகளில் பல திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு வருகிறது.

  • நலத் திட்டங்கள்
  • செயலாக்க அமைப்பு
  • பள்ளிகள் மற்றும் விடுதிகள்
  • சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்த்தல்
  • கல்வி உதவித் தொகை, கல்வி கட்டண சலுகைகள், பாிசுத் தொகைத் திட்டம்
  • பெண் கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்
  • தீண்டாமை ஒழிப்பு
  • அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல பள்ளிகள் மற்றும் விடுதிகள்

வ.எண். பள்ளி மற்றும் விடுதிகளின் வகைப்பாடு எண்ணிக்கை மாணாக்கர்களின் எண்ணிக்கை
1 அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 23 1977
2 அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகள் 33 1801

திட்டங்கள் பற்றிய விளக்கம் :

சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ இனத்தை சார்ந்தவர்களை சமூக, பொருளாதார முன்னேற்றமடைய செய்ய சிறந்த வழி அவர்களுக்கு உரிய கல்வியளித்து அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இப்பிரிவினைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் ஆதிதிராவிடர் நலத்துறை செயலல்படுத்தி வருகிறது.

செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்

திட்டங்கள் விளக்கம்
  • கல்வி உதவித் தொகை
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி பள்ளி மாணவர்களுக்கு சலுகைகள் மற்றும் ஊக்கங்கள்
  • பெண் கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம், சிறந்த தனியார் பள்ளிகளில் மாணாக்கர்களை சேர்த்தல்
  • விடுதி மாணவர்களுக்கு பாய், போர்வை.மற்றும் இதர செலவினம்
  • முதலமைச்சர் விருது மற்றும் பிற மாநில அளவிலான விருதுகள்
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல் மற்றும் இதர நலத்திட்டங்கள்
விளக்கம் (PDF 105 KB)

தொடர்பு விவரம்

மேலதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,
ஈரோடு மாவட்டம்
0424-2260455 dadwoerd[at]gmail[dot]com மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
ஈரோடு மாவட்டம்
தனிவட்டாட்சியர் ஆதிந, ஈரோடு 0424-2240455 stadwerd[at]gmail[dot]com தனிவட்டாட்சியர் ஆதிந
ஈரோடு, மாவட்ட ஆட்சியர் வளாகம்,ஈரோடு
தனிவட்டாட்சியர் ஆதிந, சத்தியமங்கலம் 04295-224511 adwstsathy[at]gmail[dot]com தனிவட்டாட்சியர் ஆதிந
சத்தியமங்கலம், வட்டாட்சியர் வளாகம்,சத்தியமங்கலம்