Close

பள்ளிக்கல்வி

பள்ளிக்கல்வித்துறை – ஈரோடு மாவட்டம்

கல்வி என்பது மனிதனை அனைத்து உயிரினங்களைவிட உயர்வான நிலையில் உருவாக்கும் கருவி ஆகும். கல்வி ஒரு சமூகத்தின் ஒருங்கிணைந்த அறிவு, திறன் மற்றும் மதிப்பீடுகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவும் ஒரு காரணி. கல்வி குழந்தைகளை சுயமாக சிந்திக்கவும், புதியனவற்றை உருவாக்கவும், கற்பனைத்திறனை வளர்க்கவும், கலை நயம் மிக்க சிந்தனைத் திறனை உருவாக்கும் அற்புதக்கருவியாகும். ஒரு குழந்தையின் படைப்புத் திறனை உருவாக்குவதற்கும், அழகியலை ஆராதிப்பதற்கும் வழிகளையும், வாய்ப்புகளையும் வழங்கும். கல்வி நம்மைச் சுற்றி இருக்க கூடிய உலகத்தைப் பற்றிய உலகளாவிய அறிவை வழங்குகிறது. குழந்தைகளுக்கு செயல்பாடுகள் குறித்த சரியான புரிதல்களை கல்வி வழங்குகிறது.

இலக்கு

கல்வியானது குழந்தைகளின் சிந்தனைத் திறனை மேம்படுத்தி, செயல்பாடுகளில் சரியான முடிவைத் தேர்வு செய்யக்கூடிய வகையில் அமைய வேண்டும். மேலும் உலகளவிலான அறிவு பள்ளிக் குழந்தைகளுக்கு தொடக்க மற்றும் இடைநிலையில் சுகமாகவும், தரமானதாகவும் சுமையில்லாத இனிமையான அடிப்படை வசதிகளுடன் பாதுகாப்பான முறையில் சென்றடைய வேண்டும்.

நோக்கம்

குழந்தைகளுக்கு தொடக்க கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வியானது தரமானதாகவும், அனைவருக்கும் சமமானதாகவும் உலக அளவில் தேடிப் பெறும் வாய்ப்பை வழங்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பின்படி, அனைத்து உரிமைகளும் பெறும் வகையிலும், குழந்தைகளின் சிந்தனைத்திறன், படைப்பாற்றலை மேம்படுத்துதல் , வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம், மதிப்பீட்டு முறை அமைதல் வேண்டும்.

குழந்தைகள், அறிவு தங்களின் உள்ளார்ந்த அறிவாற்றல் மற்றும் உடல், மனம் ஆகியவை முழுமையான வளர்ச்சி பெறும் வகையில் கல்வி வழங்க வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் வழங்குவதோடு , குழந்தைகள் கற்கும் சூழல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் புதிதாக கண்டுபிடிக்கும் திறனை வெளிக்கொணரும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.

குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் அவர்களின் தாய்மொழியில் கல்வி வழங்குதல் வேண்டும்.

குழந்தைகள் தங்களின் கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் வகையில் கல்வி அமைய வேண்டும். ஒரு குழந்தையின் அறிவு, தனித்திறன் மற்றும் குழந்தையின் உடல்நலன் மற்றும் மனநலனை முழுமையான முறையில் மேம்படுத்தும் வகையில் அமைதல் வேண்டும்.

குழந்தைகளுக்கு இறுதித்தேர்வானது அதிக நெகிழ்வுத் தன்மை மற்றும் வகுப்புறை சூழல் ஒருங்கிணைந்த தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையிலும் , வளர்ச்சிப்படி நிலையில் எதிர்கால கனவுகள் மற்றும் இலக்குகளை அச்சமின்றி அடையும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.

ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வி துறை சுயவிவரம்

கல்வித்துறை அலுவலக தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்

அலுவலகத்தின் பெயர் தொலைபேசி எண். கைபேசி எண். நகலி
முதன்மைக் கல்வி அலுவலகம், ஈரோடு மாவட்டம்-638 001 0424-2256499 94425-92900 0424-2256499
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம் (அனைவருக்கும் கல்வி இயக்கம்), ஈரோடு மாவட்டம்-638 001 0424-2265556
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட அலுவலகம், ஈரோடு மாவட்டம்-638 001 0424-2256498 73730-02651
மாவட்ட கல்வி அலுவலகம், ஈரோடு மாவட்டம் -638 001 0424-2269460 94425-92880
மாவட்ட கல்வி அலுவலகம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம் 04285-241001 94425-92883
மாவட்ட கல்வி அலுவலகம் பெருந்துறை 04294-225800 99422-18540
மாவட்ட கல்வி அலுவலகம், பவானி 04256-231560 86109-95570
மாவட்ட கல்வி அலுவலகம்,சத்தியமங்கலம் 04295-223890 93847-83059
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம்,  ஈரோடு மாவட்டம். 0424-2256499 99650-22266

 

மேலாண்மை வாரியாக பள்ளிகள்

மேலாண்மை வகை தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் மொத்தம்
அரசு பள்ளிகள் 0 0 70 94 164
நகராட்சி பள்ளிகள் 10 17 3 6 36
உண்டு உறைவிடநலத் துறை பள்ளிகள் 12 10 2 2 26
சமூக நலத்துறை பள்ளிகள் 0 0 1 0 1
அரசு நிதியுதவிப் பள்ளிகள் 84 10 14 17 125
சுயநிதிப் பள்ளிகள் 10 6 14 21 51
பதின்மப் (மெட்ரிக்) பள்ளிகள் 0 0 49 79 128
பிறவாரிய பள்ளிகள் (சி.பி.எஸ்சி / ஐ.சி.எஸ்சி) 0 0 20 17 37
ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் 768 276 0 0 1044
கஸ்துரிபா காந்தி பால வித்யாலயா பள்ளிகள் 0 6 0 0 6
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் 113 0 0 0 113
மொத்தம் 997 325 173 236 1731

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் மாணவர்  நலத்திட்டங்கள்

வ.எண். நலத்திட்டம் பயன்பெறும் வகுப்பு மாணவர்கள் 2017-2018
1 விலையில்லா புத்தகங்கள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 201420
2 விலையில்லா பாடக்குறிப்பேடுகள் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை 154500
3 விலையில்லா புத்தகப்பை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 194218
4 விலையில்லா மடிக்கணினி 12 ஆம் வகுப்பு
5 விலையில்லா சீருடை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 108977
6 விலையில்லா காலணி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை 156916
7 விலையில்லா மிதிவண்டி 11 ஆம் வகுப்பு
8 விலையில்லா கிரையான்கள் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு 25711
9 விலையில்லா வண்ண பென்சில்கள் 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 42924
10 விலையில்லா கணித உபகரணப்பெட்டி 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 21067
11 விலையில்லா புவியியல் வரைபடம் புத்தகம் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 21243
12 விலையில்லா பேருந்து பயணஅட்டை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 68535
13 இடைநிற்றலைத்தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு 13665
14 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்து மரணம் –  கல்வி உதவித்தொகை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 21