ஈரோடு மாவட்டம் கோயமுத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இம்மாவட்டத்தின் முன்வரலாறு கோயமுத்தூர் மாவட்டத்துடன் பின்னிப்பினைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு என தனியே வரலாற்றினை பிரித்துப் பரர்ப்பது மிகவும் கடினமானதாகவே இருக்கும். ஈரோடு மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்கள் இணைந்த நிலப்பகுதி முற்காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. கொங்கு மண்டலம் வரலாறு சங்ககால வரலாற்றுடன் இணைந்ததாகும். முற்காலத்தில், இந்த நிலப்பகுதி மலைவாழ் மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்துள்ளது. இவர்களில் மிக முக்கியமானவர்கள் “கோசார்கள்” இவார்களது தலைநகரமாக கோசம்புத்தூர் இருந்து வந்துள்ளது. கோசம்புத்தூர் என்பது நாளாவட்டத்தில் கோயம்புத்தூராக அழைக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. இம்மலைவாழ் மக்கள் ராஷ்டிரார்களால் தோற்கடிக்கப்பட்டனார். ராஷ்டிரர்களிடமிருந்த இப்பகுதி ராஜராஜ சோழர் ஆட்சிக்காலத்தில் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. சோழ சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்த பின்னர் கொங்கு மண்டலம் சாளுக்கியார்கள் வசமும், பாண்டியார்கள், ஹெய்ச்சாளர்கள் ஆகியோர்களின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளது. பாண்டிய அரசாங்கத்தில் ஏற்பட்ட உள்விலகல்களினாலும் டில்லியில் இருந்து வந்த முஸ்லீம் ஆட்சியாளார்கள் தலையீட்டினாலும் இப்பகுதி மதுரை முஸ்லீம் ஆட்சியாளர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. இதன் பின்னர் முஸ்லீம் ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு இப்பகுதி விஜய நகர மன்னரால் தனது ஆளுமையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் இப்பகுதி மதுரை நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. முத்து வீரப்ப நாயக்கர் மற்றும் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்கள் மற்றும் உள்விலகல்களின் காரணமாக மதுரை நாயக்கர்கள் ஆட்சி நலிவடைந்தது. இதன் காரணமாக இப்பகுதியின் ஆளுமை மைசூர் ஆட்சியாளார்களின் வசம் வந்தது. இவர்களிடமிருந்து இப்பகுதியின் ஆளுமை ஹைதர் அலி வசம் வந்தது. 1799ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் போரில் கிழக்கு இந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்தை அடுத்து இப்பகுதி மீண்டும் மைசூர் மகாராஜா ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து 1947-ல் சுதந்திரம் பெறும் வரை இப்பகுதி பிரிட்டிஷ் வசம் இருந்து வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் முறையான வருவாய் நிர்வாகம் இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டது.