வேளாண்மைப் பொறியியல் துறை
1) துறைத் தொடர்பான விபரங்கள்
1.1 முன்னுரை
நிலம் சீர்திருத்தத்தில் தொடங்கி விதைப்பு, பயிர் பாதுகாப்பு. அறுவடை மற்றும் அறுவடைக்குப்பின் மதிப்புக் கூட்டுதல் போன்ற பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்ள வேளாண்மைக்கு தொழிலாளர்கள் அரிதாகிவிட்ட இன்றைய சூழலில் கால விரயமின்றி குறித்த நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, வேளாண் இயந்திரமயமாக்கலை விவசாயிகளிடையே கொண்டு சேர்ப்பதில் இன்றியமையாததாக வேளாண்மைப் பொறியியல் துறை விளங்குகிறது.
வேளாண்மைப் பொறியியல் துறை மண் வளத்தினை பாதுகாத்திடவும், புதிய பாசன ஆதாரங்களை உருவாக்கிடவும், பாசன நீரினை இறைத்திட புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான தொழில் நுட்பங்களை புகுத்திடவும் விவசாயிகளுக்கு துணைபுரிகிறது வேளாண்மைப் பொறியியல் துறை
1.2 பார்வை
- பண்ணை சக்தியில் தன்னிறைவு.
- இளம் விவசாய தொழிலாளர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டல்.
- சமமான நீர் பகிர்வு.
- அதிகரித்த நீர்ப்பாசனம் மற்றும் பயிர் தீவிரம்.
- அனைவருக்கும் சூரிய சக்தி.
- விவசாய விளைபொருட்களின் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பைக் குறைத்தல்.
1.3 குறிக்கோள்கள்
- தனிப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவு மற்றும் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவுவதற்கு உதவுதல்.
- பண்ணை இளைஞர்களுக்கு தொழில் முனைவோரராக மாற உதவுதல் ஆதரவு.
- நுண்ணீர் பாசன அமைப்பு, கிராம நீர் மேலாண்மை உத்தியில் இருந்து பெறப்பட்ட நீர் அறுவடை கட்டமைப்புகள்.
- மானாவாரி விவசாயத்தில் மண் மற்றும் நீர் பாதுகாப்பு கவனம் செலுத்துதல்.
- வேளாண்மையில் சூரிய சக்தி பயன்பாட்டினை ஊக்குவித்தல்
- வேளாண்மையில் அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி தொழில்நுட்பத்தினை ஊக்குவித்தல்.
1.4 துறையின் அமைப்பு
தலைமைப் பொறியாளர் (வே.பொ.), சென்னை, கண்காணிப்பு பொறியாளர், கோயமுத்தூர், செயற்பொறியாளர் (வே.பொ.), ஈரோடு, உதவி செயற்பொறியாளர் (வே.பொ.). உதவிப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர்.
1.5 ஈரோடு மாவட்ட துறை அமைப்பு
கோட்ட தலைமை: செயற்பொறியாளர் (வே.பொ.), ஈரோடு
உபகோட்டம் 1: உதவி செயற்பொறியாளர் (வே.பொ.). ஈரோடு
உபகோட்டம் 2: உதவி செயற்பொறியாளர் (வே.பொ.). கோபி
வட்டார அளவிலான பொறுப்பு : உதவிப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர்
2) திட்டங்கள்
பல்வேறு சிறப்பான திட்டங்களை சீரான முறையில் கீழ்கண்டவாறு வேளாண்மை பொறியியல் துறை செயல்படுத்தி வருகிறது.
- வேளாண்மை பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல்
- வேளாண் இயந்திரமயமாக்குதல்
- வேளாண் நிலை பொருட்களை மதிப்பு கூட்டுதல்
- சூரிய சக்தி மூலம் வேளாண்மை
- மண்ணில் வள பாதுகாப்பு
- நீர் மேலாண்மை கட்டமைப்புகளை வலுப்படுத்துதல்
3) இணைய வலைத்தளம்
Genesis and Formation of Agricultural Engineering in Tamil Nadu