வான் வழி :
ஈரோடு நகரத்திலிருந்து கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் 90 கி.மீ, திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் 140 கி.மீ, தொலைவிலும் உள்ளது
தொடர்வண்டி வழி :
ஈரோடு இரயில் நிலையம் (நிலைய குறியீடு – ED) சேலம் இரயில்வே கோட்டம், தென்னக இரயில்வே கீழ் இயங்கி வருகிறது. இது சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, ராமேஸ்வரம், பெங்களூரு, எர்ணாகுளம், திருவனந்தபுரம், மங்களூர், புதுடில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பல முக்கியமான நகரங்களை இணைக்கிறது.
சாலை வழி :
ஈரோடு நகரினை, ஈரோடு – பெருந்துறை – கோயமுத்தூர் (மாநில நெடுஞ்சாலை-96, தேசிய நெடுஞ்சாலை-544), ஈரோடு – கோபிசெட்டிபாளையம் – சத்தியமங்கலம் (மாநில நெடுஞ்சாலை-15, ஈரோடு – கொடுமுடி – கரூர் (மாநில நெடுஞ்சாலை-84), ஈரோடு – காங்கேயம் – பழனி (மாநில நெடுஞ்சாலை-83ஏ), ஈரோடு – பவானி – மேட்டூர் (மாநில நெடுஞ்சாலை-20), ஈரோடு – சங்ககிரி – சேலம் (மாநில நெடுஞ்சாலை 79ஏ, தேசிய நெடுஞ்சாலை-544) ஆகிய நெடுஞ்சாலைகள் மூலம் அடையலாம். ஈரோடு நகரினை அடைவதற்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் பெரும்பாலான நகரங்களில் இருந்து பேருந்து வசதியும் உள்ளது