Close

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்துவதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முதன்மையான அலுவலகமாக உள்ளது. வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதிலும், அதன் முக்கிய நோக்கங்களை கிராமபுற மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், ஊரக வளர்ச்சி முகமை தொழில்நுட்பத்துடன்கூடிய தனித்தன்மை வாய்ந்த நிறுவனமாக உள்ளது. கிராமங்களின் வறுமை மற்றும் பிற்பட்ட நிலையை நீக்குவதற்கு அதன் கட்டமைப்புகளை பலப்படுத்துவதிலும், பொருளாதார வளங்களை மேம்படுத்துவதிலும் உதவி செய்கிறது.கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வறுமை ஒழிக்கும் நோக்த்துடன் பற்பல திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயல்படுத்துகிறது.பொருளாதார வேறுபாடுகளை களைந்து வறுமை கோட்டிற்குகீழ் உள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சியே இந்ததிட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

1980 ஆம் வருடத்திய தமிழ்நாடு அரசின் சங்கங்கள் சட்டப்படி ஊரக வளர்ச்சி முகமை தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் செயல் பட்டு வருகிறது.இதன் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், மற்றும் அதன் செயல்பாட்டையும் நிர்வகிக்கவும் உள்ள நிர்வாகக்குளு, இதனை கட்டுபடுத்தி மேற்பார்வையிடும் பணியினையும் செய்கிறது.இதன் நிர்வாக செலவீனம் மத்திய, மாநில அரசுகளால், 75:25என்ற விகிதத்தில் பிரித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதன் வாடகை,அலுவலக செலவீனங்கள் உட்பட்ட இதர செலவீனங்கள் 30%மேற்படாமல் ஒதுக்கப்படுகிறது. 15துக்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளதால், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டி பிரவில் சேர்க்கப்பட்டு, வருடத்திற்கு ரூ.171.503லட்சங்கள் ஒதுக்கப்படுகிறது. வருடாந்திர பணவீக்கத்தை ஈடு செய்ய ஒவ்வொரு வருடமும் இந்த தொகை 5%உயர்த்தப்படுகிறது.

I. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் நோக்கம்

இத்திட்டம் மாண்புமிகு பாரதப் பிரதமரால் 02.02.2006 அன்று துவக்கி வைக்கப்பட்டது.  திருப்பூா் மாவட்டத்தில் 22.02.2009 முதல் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.  கிராமபுறங்களில் உடல் உழைப்பிற்கு தயாரதக உள்ள நபா்கள் இத்திட்டத்தில் பணிபுாியலாம்.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல், கிராமபுறங்களில் வாழும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், நிலைத்து நிற்கக் கூடிய சொத்துக்களை உருவாக்குதல்.

2017 -18 ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகளின் விபரம்

  1. புதிய குட்டைகள் அமைத்தல்
  2. ஏற்கனவே  உள்ள குட்டை, குளம் ஊரணி போன்ற நீா்வள ஆதாரங்களை புனரமைத்தல்
  3. நீா்வரத்துக் கால்வாய்களைத் துாா் வாருதல்
  4. பாசனக்குளங்களை துாா் வாருதல் மற்றும் கரைகளைப் பலப்படுத்துதல்
  5. புதிய மண்சாலைகளை அமைத்தல் மற்றும் பராமாித்தல்.
  6. நீா்வள, மண்வள, நிலவள பாதுகாப்பு பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள்.
  7. பெருமளவில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சாலையோரங்களில் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடுதல்.
  8. பண்ணைக்குட்டைகள் அமைத்தல்.
  9. ஆழ்குழாய் கிணற்றுடன் மழைநீா் சேகாிப்புத் தொட்டி அமைத்தல்.
  10. ஆழ்குழாய் கிணற்றுக்கு மழைநீா் சேகாிப்பு அமைத்தல்.
  11. . அங்கன்வாடி மையம் கட்டுதல்.
  12. ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுதல்.
  13. தனிநபா் உரக்குழி அமைத்தல்
  14. மண்புழு உரம் தயாாிக்கும் கொட்டில்
  15. தடுப்பணை அமைத்தல்
  16. தனிநபா் இல்ல திரவக் கழிவு உறிஞ்சுகுழிகள் அமைத்தல்.
  17. சமுதாய திரவக்கழிவு உறிஞ்சுகுழிகள் அமைத்தல்
  18. பள்ளிக்கட்டிட சுற்றுசுவா் கட்டுதல்
  19. சுய உதவிக்குழு உட்கட்டமைப்பு கட்டிடம்

பிரதம மந்திாி கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம்

பிரதம மந்திாி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தித்தின் முக்கிய நோக்கம் குக்கிராம பகுதிகளை ஏதாவது ஒரு வகையில் அருகிலுள்ள பகுதிகளுடன் இணைப்பது ஆகும்.  இதன் மூலம் குக்கிராம சந்தை வசதி மற்றும் கருத்தில் கொள்ளாது கிராமப் பகுதிகளையும் முன்னேற்ற வேண்டும் என்ற உயாிய நோக்கோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.  இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறத்தில் சாலை வசதிகள் செய்து தரப்படுகின்றன.  2017-18 ஆம் நிதியாண்டில் 60 சாலைகள் ரூ.1924.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

பிரதம மந்திாி குடியிருப்புத்திட்டம் (ஊரகம்)

  1. ஊரக குடியிருப்புத்திட்டமான இந்திரா நினைவு குடியிருப்புத்திட்டம் 2016- 17 ம் ஆண்டு முதல் பிரதம மந்திாி குடியிருப்புத்திட்டம் (ஊரகம்) என சீரமைக்கப்பட்டுள்ளது.
  • கிராமப் பகுதிகளில் வாழும் வீடு இல்லாத குடிசை மற்றும் பாழடைந்த வீடுகளில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய தரமாக வீடுகள் கட்டித் தருதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தகுதிவாய்ந்த பயனாளிகள்

சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் 2011- ஜ பயன்படுத்தி அடிப்படையாக கிராம சபை மூலம் பயனாளிகள் கண்டறியப்படுகின்றனா்.  பயனாளிகளின் பெயா்களை பயனாளிகளின் பட்டியலில் சோ்க்கவும் நீக்கவும் மற்றும் முடிவுக்குக் கொண்டு வரவும் மாவட்ட அளவில் ஒரு குறை தீா்க்கும் முறையை ஏற்படுத்தி மேல்முறையீட்டுக் குழு என பெயாிட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயனாளிகள் தோ்வு செய்யும் முறை

  1. 16 வயது முதல் 59 வயது வரம்பிற்கு உட்பட்ட நபா்கள் இல்லாத வீடு
  2. பெண் தலைமையிலான வீட்டில் 16 வயது முதல் 59 வயது வரையிலான ஆண் உறுப்பினா் இல்லாத வீடு
  3. 25 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு இல்லாத நபா்களின் வீடு
  4. சம்பாதிப்பதற்கு திறன் அற்ற முதியோா் உள்ள மாற்றுத்திறனாளிகள் உள்ள வீடு
  5. நிலமற்ற கிராமப்புற கைவினைஞா் (உதாரணமாக வீட்டு வேரை செய்தல், தோட்ட காவல், அன்றாட கூலி வேலை மூலம் சம்பாதிக்க கூடிய நபா்கள்)

முதலமைச்சாின் சூாிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்

கிராமப்புற மக்களின் வீட்டு வசதி தேவைகளைப் பூா்த்தி செய்வதோடு பசுமை எாிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்மா பூங்கா

தமிழக முன்னாள் முதலமைச்சா் மாண்புமிகு அம்மா அவா்கள், தமிழக சட்டப்பேரவையில் 29.08.2016 அன்று 110-வது விதியின் கீழ் கிராமப் புறங்களில் 500 – அம்மா பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.  வருகின்ற நிதியாண்டில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் தலா 20- இலட்சம் வீதம் 500 – அம்மா பூங்காக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அரசானை பிறப்பிக்கப்படுகிறது.

சிறப்பம்ச விதிகள்

சிமெண்ட் தரை தளம் மற்றும் முறையான நடைபாதை அமைப்பு முறையும், எல்.ஈ.டி – விளக்குகள் பொருத்தப்பட்டும், முறையான இருக்கை அமைப்புகள் செய்யப்பட்டும், முறையான குடிநீா் வசதிகள் செய்யப்பட்டும், குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் செய்து தரப்பட்டும், வரவேற்பு வளைவு மற்றும் சுற்றுச்சுவா் வசதிகளும் செய்யப்பட வேண்டும்.  உடல்திறனை மேம்படுத்தும் வகையில் உடற்பயிற்சி சாதனங்களும் மற்றும் ”8” வடிவ நடைபாதை அமைப்புகளும் அமைக்கப்பட வேண்டும்.