ஈரோடு மாவட்ட வேளாண்மை பயிர் சாகுபடி பரப்பு நீர்பாசனம் பற்றிய குறிப்புகள் :
ஈரோடு மாவட்டம் 1,56,641 எக்டர் பரப்பளவு நிகர சாகுபடி பரப்பு கொண்டுள்ளது. மாவட்டத்தில் நெல் பயிர் 25,100 எக்டர், சிறுதானியங்கள் 20,100 எக்டர், பயறு வகைகள் 5500 எக்டர், எண்ணெய்வித்துக்கள் 22,900 எக்டர், பருத்தி 900 எக்டர் மற்றும் கரும்பு பயிர் 16000 எக்டர் பரப்பு வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 70% வேளாண் பயிர்கள் நீர் பாசனம் பெற்று (இறவை) சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழ்பவானி கால்வாய் பாசனம், தடப்பள்ளி அரக்கன்கோட்டை கால்வாய் பாசனம், காளிங்கராயன் கால்வாய் பாசனம் மற்றும் மேட்டூர் மேற்குகரை கால்வாய்கள் பிரதான பாசன ஆதாரங்களாக விளங்குகின்றன.
நோக்கம் :
- தமிழ்நாட்டில் கூடுதலாக75 இலட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர பயிரிடு பரப்பான 60 விழுக்காடு 75 விழுக்காடாக உயர்த்தப்படும்.
- 10 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக அதாவது 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.
- உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம் பிடிக்கும்.
நிர்வாக அலுவலகத் தகவல்
மாநில அளவிலான அலுவலகம்:வேளாண்மை இயக்குநரகம், சேப்பாக்கம்,சென்னை – 600005
மாவட்ட அளவிலான அலுவலகம்:வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்,வித்யா நகர், திண்டல், ஈரோடு – 638 012.
வட்டார அளவிலான அலுவலகம்:
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
வட்டார வேளாண்மை விரிவாக்க மையம்,
யூனியன் ஆபீஸ் வளாகம், அம்மாபேட்டை – 638311.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்,
யூனியன் ஆபீஸ் வளாகம், தவுட்டுப்பாளையம், அந்தியூர்-638501.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்,
மாநில விதை பண்ணை வளாக அலுவலகம்,
குருப்பநாயக்கன்பாளையம், பவானி – 638301.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்,
பவானிசாகர் – 638 451.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்,
குருநகர், நாமக்கல்பாளையம், சென்னிமலை-638051.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
வட்டார வேளாண்மை விரிவாக்க மையம்,
யூனியன் ஆபிஸ் வளாகம், பி.எஸ்.பார்க், ஈரோடு-638 001.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்,
யூனியன் ஆபிஸ் வளாகம், கச்சேரி மேடு,
கோபிச்செட்டிபாளையம்-638476.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
வட்டார வேளாண்மை விரிவாக்க மையம்,
288, அரச்சலூர் மெயின் ரோடு, தாமரைபாளையம்,
கொடுமுடி-638 152.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
வட்டார வேளாண்மை விரிவாக்க மையம்,
வாரசந்தை வளாகம், மொடக்குறிச்சி – 638 104.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்,
எம்மாம்பூண்டி ரோடு, ஜீவா செட் பின்புறம்,
நம்பியூர் – 638 458.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்,
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மஞ்சள் வணிக வளாகம்,
சிலேட்டர் நகர், பெருந்துறை-638 052.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
வட்டார வேளாண்மை விரிவாக்க மையம்,
திம்மையன் புதூர், கோபி மெயின்ரோடு,
சத்தியமங்கலம் – 638 402.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
வட்டார வேளாண்மை விரிவாக்க மையம்,
யூனியன் ஆபிஸ் வளாகம்,
தூக்கநாயக்கன்பாளையம்-638 506.
- வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
வட்டார வேளாண்மை விரிவாக்க மையம்,
கொங்கஹள்ளி ரோடு, தாளவாடி – 638 461.
தகவல் தொகுப்பு :
மாவட்ட அளவிலான விவரம்
பதவி : வேளாண்மை இணை இயக்குநர்
மின்னஞ்சல் : agrierd@gmail.com
தொலைபேசி எண் : 0424-2339101
பதவி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
(வேளாண்மை) / வேளாண்மை துணை இயக்குநர்
மின்னஞ்சல் : paagricollectorateerode@gmail.com
வட்டார அளவிலான விவரம்
பதவி : வேளாண்மை உதவி இயக்குநர்
மின்னஞ்சல்
அம்மாபேட்டை : agriammapet@gmail.com
அந்தியூர் : adagrianthiyur@gmail.com
பவானி : adabhavani2023@gmail.com
பாவனிசாகர் : adabhavanisagar@gmail.com
சென்னிமலை : adagrichennimalai@gmail.com
ஈரோடு : adaerode123@gmail.com
கோபிச்செட்டிபாளையம் : adagobi123@gmail.com
கொடுமுடி : kodumudiagri@gmail.com
மொடக்குறிச்சி : adamodakurichi@gmail.com
நம்பியூர் : adanambiyur@gmail.com
பெருந்துறை : priagriada@gmail.com
சத்தியமங்கலம் : agristy2010@gmail.com
தூக்கநாயக்கன்பாளையம் : agritnpalayam@gmail.com
தாளவாடி : adathalavadi@gmail.com
திட்டங்கள் :
மாநில அரசு நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் பின்வருமாறு :
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் – 2025-26
மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்வதை ஊக்குவித்திட ஒரு ஏக்கருக்கு ரூ.800/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
- குறைந்த நீர் தேவையுள்ள பயிர்களை ஊக்குவித்திட மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தில் நெற்பயிருக்கு மாற்றாக பயறுவகை மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவித்திட ஏக்கருக்கு 50% மானியம் அல்லது ரூ.1250/-
- பருத்தியில் வேளாண் சுற்றுச்சூழல் சார்ந்த பூச்சி நோய் மேலாண்மை – 100% மானியமாக எக்டருக்கு ரூ.4900/-
- பருத்தி நுண்ணூட்ட உர விநியோகம் 75% மானியமாக எக்டருக்கு ரூ.1250/-
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்:
- மண்ணில் உயிர்ம கரிமச் சத்தினையும், பயிர் மகசூலையும் அதிகரிக்க பசுந்தாள் உர விதைகள் விநியோகம் ஏக்கருக்கு 20 கிலோ 50% மானியமாக அதிகபட்சம் ரூ.1250/- வரை வழங்கப்படும்.
- மண்புழு உர உற்பத்தியினை ஊக்குவித்திட அதிகபட்சமாக ரூ.3000/- (50% மானியம்).
- இயற்கை இடுபொருள் தயாரித்தல் மையம் அமைத்திட ஒரு உழவர் குழுவிற்கு ரூ.1,00,000/- மானியம்.
- உயிர்ம வேளாண்மை மாதிரி பண்ணை திடல் அமைத்திட ரூ.10,000/- நிதியுதவி.
- குறைந்த அடர்வு நடவுமுறை அல்லது வரப்பு வயல் ஓரங்களில் நடவு செய்திட முழு மானியத்தில் வேப்ப மரக்கன்றுகள் விநியோகம்.
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்
- துவரை சாகுபடி பரப்பை விரிவாக்கம் செய்திட அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.2500/- மானியம்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்:
- தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றிட தரிசு நிலத் தொகுப்பு மேம்பாட்டு திட்டம்.
- தனிநபர் விவசாயிகளின் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி சமன்செய்து உழுதிட 1 எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.9600/- மானியம்.
- வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவித்திட 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.300/- மானியம்.
- நன்மை பயக்கும் நுண்ணுயிர்களைப் பெருக்கி மண்வளத்தை மேம்படுத்துவதற்கான செயல்விளக்கத் திடல் அமைத்திட எக்டர் ஒன்றிற்கு 50% மானியம் ரூ.450/- வழங்கப்படும்.
- விசைத் தெளிப்பான் (Battery Sprayer) 50% மானியத்தில் வழங்கப்படும்.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்:
- மாற்றுப் பயிர் சாகுபடி திட்டத்தின் மூலம் சிறுதானிய சாகுபடிப் பரப்பை அதிகரித்திட 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.1250/- மானியம்.
முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம்:
- ரூ.10 முதல் 20 இலட்சம் மதிப்பில் வங்கியில் கடனுதவி பெற்று அமைக்கப்படும் உழவர் நல சேவை மையங்களுக்கு 30% மானியமாக ரூ.3 இலட்சம் முதல் 6 இலட்சம் வரை வழங்கப்படும்.
மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்:
- குறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளித்து, குறுதானிய சாகுபடி பரப்பை அதிகரித்திட குறுதானிய சாகுபடிக்கு பின்னேற்பு மானியமாக எக்டருக்கு ரூ.4000/- மற்றும் 100% மானியத்தில் குறுதானிய சிறுதளைகள் விநியோகம் செய்தல்.
மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் பின்வருமாறு.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் – புதிய இரக விதைகள் ஊக்குவித்தல் திட்டம்
- அறிவிக்கை செய்யப்பட்ட நெல், தானியங்கள், சிறுதானியங்கள், பயறுவகைகள் பயிர்களின் இரகங்கள் / வீரிய ஒட்டு இரகங்களின் விதை விநியோகத்திற்கு மானியம் வழங்கப்படும்.
- அதிகபட்சமாக விவசாயி ஒருவருக்கு 1 எக்டர் வரை மட்டுமே மானியம் வழங்கப்படும்.
- நெல் விதை விநியோகத்திற்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.20/கிலோ.
- சிறுதானிய விதை விநியோகத்திற்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.30/கிலோ.
- பயறுவகை விதை விநியோகத்திற்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.50/கிலோ.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் – பயறுவகை
நோக்கம் : பயறுவகை பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல்.
இத்திட்டத்தில் செயல்விளக்கத்திடல் அமைத்தல், 8 ஆண்டுகளுக்கு குறைவான புதிய உயர் விளைச்சல் இரக பயறுவகைகள் உற்பத்தி செய்ய உற்பத்தி மானியம் வழங்குதல், 10 ஆண்டுகளுக்கு குறைவான உயர் விளைச்சல் பயறுவகை விதைகள் விநியோகம் செய்திட மானியம் வழங்குதல், பயறுவகை பயிர்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க பயறுவகை நுண்ணூட்ட விநியோகம், உயிர்உர விநியோகம் போன்ற இனங்களுக்கும், பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் – தானியங்கள்
நோக்கம் : மக்காச்சோளப்பயிரின் பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல்.
இத்திட்டத்தில் செயல்விளக்கத்திடல் அமைத்தல், உயர் விளைச்சல் ஒட்டுரக விதைகள் விநியோகம் செய்திட மானியம் வழங்குதல், பயிரின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் மற்றும் உயிர் உரம் விநியோகம், பயிர் பாதுகாப்பு மருந்துகள் விநியோகம் ஆகிய இனங்களுக்கு மானியம் வழங்கிட இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் – ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள்
நோக்கம் : சிறுதானிய பயிர்களான சோளம், கம்பு மற்றும் இராகி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல்.
இத்திட்டத்தில் செயல்விளக்கத்திடல் அமைத்தல், உயர் விளைச்சல் ஒட்டுரக விதைகள் விநியோகம் செய்திட மானியம் வழங்குதல், 8 ஆண்டுகளுக்கு குறைவான புதிய உயர் விளைச்சல் இரக சிறுதானியங்கள் உற்பத்தி செய்ய உற்பத்தி மானியம் வழங்குதல், 10 ஆண்டுகளுக்கு குறைவான உயர் விளைச்சல் சிறுதானியங்கள் விதைகள் விநியோகம் செய்திட மானியம் வழங்குதல், பயிரின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க சிறுதானிய நுண்ணூட்டம் மற்றும் உயிர் உரம் விநியோகம், பயிர் பாதுகாப்பு மருந்துகள் விநியோகம், அறுவடை பின்செய் செயல்பாடுகளில் தார்பாலின் விநியோகம், நானோ யூரியா தெளிப்பு மானியம் வழங்குதல் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட விழிப்புணர்வு முகாம், சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட அளவிலான சிறுதானிய உணவுத்திருவிழா உள்ளிட்ட இனங்களுக்கு மானியம் வழங்கிட இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் – பருத்தி
நோக்கம் : பருத்தி பயிர் சாகுபடியினை ஊக்குவித்தல்
இத்திட்டத்தில் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த முன்னோடி செயல்விளக்கத்திடல் அமைத்தல், பருத்தியில் ஊடுபயிர் சாகுபடியினை ஊக்குவித்தல் ஆகிய இனங்களில் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் – கரும்பு
நோக்கம் : கரும்பு சாகுபடியினை ஊக்குவித்தல்
இத்திட்டத்தில் கரும்பில் ஊடுபயிர் சாகுபடியினை ஊக்குவிக்க செயல்விளக்கத்திடல் அமைத்தல், பயிர் பாதுகாப்பு மருந்துகள் விநியோகம் ஆகிய இனங்களில் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் – எண்ணெய்வித்துக்கள்
நோக்கம் : எண்ணெய்வித்து பயிர்களான நிலக்கடலை மற்றும் எள் சாகுபடி பரப்பினை அதிகரித்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல்.
இத்திட்டத்தில் நிலக்கடலை மற்றும் எள் பயிர்களில் மதிப்பு சங்கிலி தொகுப்பு ஏற்படுத்தி, விவசாயிகளின் விளைபொருட்களை மதிப்பு சங்கிலி பங்குதாரர் மூலம் கொள்முதல் செய்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலக்கடலை மற்றும் எள் சாகுபடியினை அதிகரிக்க வட்டார செயல்விளக்கத்திடல் அமைத்தல் இனங்களில் மானியம் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் – நெல்
நோக்கம் : நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து உற்பத்தியினை பெருக்குதல்.
இத்திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு குறைவான புதிய உயர் விளைச்சல் நெல் இரகங்களின் சான்று விதைகளை உற்பத்தி செய்ய உற்பத்தி மானியம் வழங்குதல், மேலும் அவ்விதைகளை விநியோகம் செய்திட விநியோக மானியம் வழங்குதல், நீர் சிக்கனம் மற்றும் ஆட்கூலி செலவினங்களில் சேமிப்பு மேற்கொள்ள இயந்திர நடவு மூலம் திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு மேற்கொள்ள மானியம், நெல் வயலில் பாசி படிவதை தடுக்க மயில் துத்தம் இடுதல் இனங்களில் மானியம் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் – துவரை
நோக்கம் : நடவு முறை துவரை சாகுபடியை ஊக்குவித்தல்.
இத்திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு குறைவான புதிய உயர் விளைச்சல் துவரை இரகங்களை நாற்றுவிட்டு சாகுபடி செய்யும் செயல்விளக்கத்திடல் அமைத்திட, உயர்விளைச்சல் துவரை இரக விதைகள், குழித்தட்டுகள், தென்னை நார்க்கழிவு உரம், உயிர்உரங்கள், பயறுநுண்ணூட்டம், உயிரியல் காரணிகளுக்கு மானியத்துடன் உழவு மானியம் மற்றும் இலைவழி டி.ஏ.பி தெளிப்பு மானியம் வழங்கிட இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் – மக்காச்சோளம்
நோக்கம் : மக்காச்சோள சாகுபடி ஊக்குவித்து, மக்காச்சோள பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல்.
இத்திட்டத்தில் செயல்விளக்கம் அமைத்திட 10 ஆண்டுகளுக்கு குறைவான புதிய உயர் விளைச்சல் வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள், திரவ உயிர்உரங்கள், இயற்கை இடுபொருட்கள், மற்றும் இலைவழி நானோ யூரியா தெளிப்பிற்கு மானியம் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் – பருத்தி
நோக்கம் : தரமான நீண்ட இழையுள்ள பருத்தி விதை உற்பத்தி மற்றும் விநியோகம்.
இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் நீண்ட இழையுள்ள பருத்தி விதை விநியோகம் மற்றும் பருத்தில் நுனி கிள்ளுதல் தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க மானியம் வழங்கப்படுகிறது.
மானாவாரி பகுதி மேம்பாடு – ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்
நோக்கம் : மானாவாரி பகுதிகளில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திட வேளாண்மையுடன், பிற இனங்களையும் ஒருங்கிணைத்தல்.
இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திட வகையில், பயிர் சாகுபடியுடன் கறவை மாடுகள் / ஆடு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பழ மரங்கள் சாகுபடிக்கு பழக்கன்றுகள் விநியோகம் மற்றும் மண்புழு உரப்படுக்கை அமைத்தல் உள்ளிட்ட இனங்களை ஒருங்கிணைக்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டம்
நோக்கம் : தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் தொகுப்பிற்கு, உயிர்ம வேளாண்மை மேற்கொள்ள பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்குதல், விவசாயிகளுக்கு பங்களிப்பு உத்தரவாத சான்றளிப்பு பெற உதவுதல், விளைப்பொருட்களை சந்தைப்படுத்திட உதவுதல்.
இத்திட்டம் 2023-24இல் இருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 400 விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, அவர்களை இயற்கை இடுபொருட்கள் தயாரித்து பயன்படுத்தவும், விளைபொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்திட தேவையான பேக்கேஜிங், பிராண்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகள் வழங்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம்
நோக்கம் : இரசாயனம் இல்லாத விவசாயத்தை ஊக்குவித்தல், உள்ளூர் இன கால்நடைகளை பராமரித்தல், பன்முக பயிர் சாகுபடி முறையினை பயன்படுத்துதல், மண் வளத்தினை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பது மற்றும் விவசாயிகள் பயன்படுத்தும் இடுபொருள் செலவுகளை குறைத்து காலநிலை மீள் தன்மையை அடைதல் இத்திட்டதின் நோக்கமாகும்.
இத்திட்டத்தினை செயல்படுத்திட முதன்மை பயிற்சியாளர், இயற்கை விவசாயத்தில் பயிற்சி பெற்ற வேளாண் மகளிர், இயற்கை வேளாண்மை தொகுப்பு விவசாயிகள் மற்றும் இயற்கை இடுபொருள் மையங்கள் அமையப்பெறுதல் அவசியம். ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் 250 ஏக்கர் பரப்பில், தொகுப்பு அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராம பஞ்சாயத்தில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தி, பயிற்சி பெற்ற வோளண் மகளிர் மூலம் விவசாயிகளை ஒருங்கிணைத்து, பயிற்சி வழங்கி, பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் கட்டணம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் ஆர்வமுடன் இயற்கை வேளாண்மையில் ஈடுபட இயற்கை இடுபொருள் மையங்கள் அமைத்திட டிரம்கள், அரவை இயந்திரங்கள், சேமிப்பு கலன்கள், குளிர்சாதன பெட்டி, தானியங்கி நொதித்தல் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிட நிதியுதவி வழங்கப்படுகிறது.
வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கம்
நோக்கம் – ஆட்கூலி செலவினத்தை குறைத்திடும் வகையிலும், விவசாய பணிகளை விரைந்து முடித்திட சிறுகுறு விவசாயிகளிடையே வேளாண்மை இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல்.
இத்திட்டத்தில் பவர்டில்லர், ரோட்டோவேட்டர், பவர் வீடர், பேட்டரி தெளிப்பான்கள், நெல் /மக்காச்சோளம்/ நிலக்கடலை விதை விதைக்கும் கருவிகள் உள்ளிட்டவை மானியத்தில் வழங்கப்படுகிறது. சிறுகுறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ஒன்றிய அரசினால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவோ, அத்தொகை இதர பயனாளிகளுக்கு 40 சதவீதம் அல்லது ஒன்றிய அரசினால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
மத்திய மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
அ. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம்
ஈரோடு மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டமானது காரிப் பருவத்தில் மக்காசோளம், துவரை, நிலக்கடலை, ராகி மற்றும் எள் ஆகிய பயிர்களுக்கும் ராபி பருவத்தில் சம்பா நெல் மற்றும் கரும்பு பயிர்களுக்கும் பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் நோக்கம்:
- இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
- விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெறச் செய்தல்.
- நவீன சாகுபடி தொழில் நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல்.
- விவசாய பெருமக்களுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதுடன் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல்.
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆதார் அட்டை, அடங்கல்/ சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், பதிவு படிவம், முன்மொழிவு படிவங்களுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, முதன்மை வங்கி வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஆ. கிருஷோன்னதி யோஜனா – மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத்திட்டம் செயல்படுத்துதல்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை
நோக்கம்:
விவசாயிகளின் நலனுக்காக, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் மத்திய அரசு நிதியாக 60% மற்றும் மாநில அரசு நிதியாக 40% நிதிபங்களிப்புடன், 2005-06 ஆம் ஆண்டு முதல் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.
வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த அனைத்து சகோதரத் துறைகளுக்கும் விவசாயிகள் பயிற்சிகள் இனத்தில் மாநிலங்களுக்கு இடையேயான, மாநிலத்திற்குள் மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சிகள், கண்டுனர் சுற்றுலாக்கள், விவசாயிகளுக்கான களப்பயணங்கள், செயல்விளக்கங்கள், வயல் விழாக்கள், மாவட்ட அளவிலான கண்காட்சி, துண்டுப் பிரசுரங்கள் வெளியீடு, கூட்டாய்வு, விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்வு, பண்ணைப்பள்ளிகள் போன்ற பல செயல்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இ. நுண்ணீர்ப்பாசனத் திட்டம்:
நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் சிறு/ குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும், சொட்டுநீர்ப்பாசனம், தெளிப்புநீர்ப்பாசனம், மழைத்தூவான் போன்றவை அமைத்துத் தரப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம்
அ. உதவி பொது தகவல் அலுவலர் : ( 14 வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் ) – தங்களது பகுதிக்கு உட்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்
ஆ. முதல் மேல்முறையீட்டு அலுவலர் : வேளாண்மை இணை இயக்குநர்
இணைய தள முகவரி
www.tnagrisnet.tn.gov.in