Close

பட்டுவளர்ச்சித் துறை

1)துறை பற்றிய தகவல்

பட்டுவளர்ச்சி என்பது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட முக்கிய வாழ்வாதாரத் துறையாகும். இது ஆண்டு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், சிறு மற்றும் குறு விவசாயிகள், பெண்களுக்கு  வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. பட்டுவளர்ச்சித் துறை மல்பெரி சாகுபடி, பட்டுப்புழுவளர்ப்பு, பட்டுக்கூடு உற்பத்தி, பட்டுநூற்பு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய “பண்ணை முதல் துணி வரை” என்ற முழுமையான மதிப்புச்சங்கிலி மூலம் விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளை ஒருங்கிணைக்கிறது. காலநிலை மாற்றங்கள், சந்தைப்படுத்துதலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தரமான பட்டிற்கு அதிகரிக்கும் தேவையை கருத்தில் கொண்டு, பட்டுவளர்ச்சித் துறையில் நவீனமயமாக்கலும், மதிப்புச்சங்கிலி வலுப்படுத்தலும் அவசியமாகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, துறைவாரியான தொலைநோக்கு பார்வை மூலம், பட்டுவளர்ப்பை தாங்குத்தன்மை கொண்ட, போட்டித்திறன் மிக்க மற்றும் எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய துறையாக மாற்றுவதற்கான கட்டமைக்கப்பட்ட செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

2) தொலைநோக்கு

பட்டுவளர்ப்பை நிலைத்தன்மை கொண்ட, தொழில்நுட்ப ஆதாரமுடைய மற்றும் மதிப்புக்கூட்டும் அமைப்பாக மாற்றி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன், தொழில்முனைவோரை ஊக்குவித்து, தேசிய மற்றும் உலகளாவிய அளவில் வலுவான அடையாளத்தை உருவாக்குதல்.

3) நோக்கம்

  • அறிவியல் சார்ந்த, காலநிலை சூழ்நிலைகளைத் தாங்கும் நடைமுறைகள் மூலம் மல்பெரி உற்பத்தித் திறன் மற்றும் மண் வளத்தை மேம்படுத்துதல்.
  • தர உறுதிப்படுத்தல் அமைப்புகளுடன் கூடிய நவீன மற்றும் தானியங்கி பட்டு வித்தகம் மற்றும் பட்டுவளர்ப்பு உட்கட்டமைப்புகளை உருவாக்குதல்.
  • பட்டுக்கூட்டிற்கு பிந்தைய நிலையினை மதிப்புக் கூட்டல் மற்றும் பல்வகைப்படுத்தலுக்கு முக்கியத்துவம் அளித்து, முழு பட்டுவளர்ப்பு மதிப்புச்சங்கிலியை வலுப்படுத்துதல்.
  • திறன் மேம்பாடு, தொழில் ஆதரவு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு மூலம் இளைஞர் மற்றும் பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவித்தல்.
  • டிஜிட்டல் நிர்வாகம், புதுமை மற்றும் பிராண்டிங் ஆகியவற்றை பயன்படுத்தி, செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் சந்தைப் போட்டித்திறனை உயர்த்துதல்.

4) நிர்வாக அமைப்பு

  • இயக்குநர், பட்டுவளர்ச்சித் துறை, சேலம்
  • இணை இயக்குநர் (தலைமையிடம்), பட்டுவளர்ச்சித் துறை, சேலம்
  • மண்டல இணை இயக்குநர், பட்டுவளர்ச்சித் துறை, ஈரோடு
  • உதவி இயக்குநர், பட்டுவளர்ச்சித் துறை, ஈரோடு
  • பட்டு ஆய்வாளர்
  • உதவி பட்டு ஆய்வாளர்
  • இளநிலை பட்டு ஆய்வாளர்

5) ஈரோடு மாவட்ட துறை அமைப்பு

கோட்டத் தலைமை :

உதவி இயக்குநர், பட்டுவளர்ச்சித் துறை, ஈரோடு

வட்டார அளவிலான பொறுப்பு:

உதவி பட்டு ஆய்வாளர் / இளநிலை பட்டு ஆய்வாளர்

6) துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

விவசாயிகளை எளிதாக சென்றடையும் வகையில், பட்டுவளர்ச்சித் துறை பின்வரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

1) மத்திய பகுதித் திட்டம் : சில்க் சமக்ரா – 2

  • மல்பெரி சாகுபடி,
  • பட்டுப்புழு வளர்ப்பு மனை,
  • பட்டுப்புழுவளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள்,
  • பட்டுப்புழுவளர்ப்பு கிருமிநாசினிகள் மற்றும்
  • தொழில்நுட்ப பயிற்சி ஆகிய தொகுப்புதவி வழங்குதல்
  • மல்பெரி நாற்றாங்கால் அமைக்க உதவியளித்தல்
  • இளம்புழுவளர்ப்பு மையம் அமைக்க உதவியளித்தல்.
  • தானியங்கி பட்டுநூற்பு அலகு அமைக்க உதவியளித்தல் (400 முனைகள், 200 முனைகள் மற்றும் 120 முனைகள்) மற்றும் பட்டு தொழில்நுட்ப பயிற்சி வழங்குதல்.
  • பட்டு முறுக்கேற்றும் அலகு அமைக்க உதவியளித்தல் (10 பேசின்கள்) மற்றும் பட்டு தொழில்நுட்ப பயிற்சி வழங்குதல்.

2)மாநிலத் திட்டம்

  • பட்டு பல்நோக்கு ஆலோசனை மையம் அமைக்க உதவியளித்தல்
  • விதைக்கூடு உற்பத்தியாளர்களுக்கு இளம்புழு அறை அமைக்க உதவியளித்தல்
  • மண் வள மேம்பாட்டிற்காக முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு தண்டு தூளாக்கும் இயந்திரம் மற்றும் சோலார் விளக்குப் பொறி வழங்குதல்
  • மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிகள், விதைக்கூடு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டுநூற்பாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்குதல்

7) இணையதள முகவரி

https://tnsericulture.tn.gov.in/