பொது நூலகத்துறை
தோற்றமும் வளர்ச்சியும்
கோவை மாவட்ட நூலக ஆணைக்குழுவில் கிளை நூலகமாக செயல்பட்டு வந்த இந்நூலகம், ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்டவுடன் 1.6.1980 முதல் மாவட்ட மைய நூலகமாக உயர்த்தப்பட்டு சீரோடும் சிறப்போடும் செயல்பட்டு வருகிறது. இம்மைய நூலகக் கட்டிடம் ஈரோடு நகராட்சியிடமிருந்து ரூ.2,45,210.30 செலுத்தி விலைக்கு வாங்கப்பட்டது. இம்மைய நூலகம் ஈரோடு வ.உ.சி.பூங்கா பின்புறம் 5744 சதுர அடி பரப்பளவில் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு 22.01.1992 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
S.No. | நுாலகத்தின் வகை | No | 1 | மாவட்ட மைய நூலகம் | 1 |
---|---|---|
2 | நவீன நூலகம் | 1 |
3 | முழுநேர நூலகங்கள் | 20 |
4 | கிளை நூலகங்கள் | 65 |
5 | ஊர்ப்புற நூலகங்கள் | 100 |
6 | நடமாடும் நூலகம் | 1 |
7 | பகுதி நேர நூலகங்கள் | 18 |
8 | சிறப்பு நூலகங்கள் | 3 |
மொத்தம் | 209 |
உறுப்பினர்கள் சேர்க்கை
1.நூலகங்களில் உறுப்பினராக சேர்வதற்கு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் காப்புத் தொகை ரூ.50/- , சந்தா தொகை ரூ.10/- என ஆக மொத்தம் ரூ.60/- செலுத்தப்பட வேண்டும். 2.ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள நூலகங்களில் உறுப்பினராக சேர காப்புத் தொகை ரூ.30/- சந்தா தொகை ரூ.5/- என ஆக மொத்தம் 35/- செலுத்தப்பட வேண்டும்.
புரவலர் திட்டம்
நூலகங்களில் புரவலராக இணைய ரூ.1000/-, பெரும்புரவலராக இணைய ரூ.5000/- மற்றும் கொடையாளராக இணைய ரூ.10000/- செலுத்தி இணைந்து கொள்ளலாம்.
சிறப்பு அம்சங்கள்
1.மாவட்ட மைய நூலகத்தில் கண் பார்வையற்றவர்கள் படிக்கும் எழுத்துணரி மென்பொருள் (Kibo XS Kit (Perpetual)) என்ற உபகரண வசதி உள்ளது. 2.மாவட்ட மைய நூலகம், நவீன நூலகம், மற்றும் கோபி கிளை நூலகம் - 1 ஆகியவற்றில் மெய் நிகர் (Virtual Reality) கருவியை பயன்படுத்தும் வசதி உள்ளது. 3.போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவ / மாணவியர் பயன்படுத்தும் வகையில் 87 முழுநேர / கிளை நூலகங்களில் Wi-fi வசதி செய்யப்பட்டுள்ளது.
திட்டம்
புதிய மாவட்ட மைய நூலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.