Close

விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை

1 அறிமுகம்

1.1 அறிமுக உரை:

விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறையின் விதை ஆய்வுப் பிரிவு, விதைச் சட்டம் 1906, விதை விதிகள் 1968 விதைகள் (கட்டுப்பாட்டு) ஆணை 1983 மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986 ஆகிய பல்வேறு விதைச் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம், விவசாயிகளுக்குத் தரமான விதைகள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்கிறது. ஈரோடு விதை ஆய்வுத் துணை இயக்குநர் அலுவலகத்தின் கீழ் இதுவரை 958 விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விற்பனை நிலையங்கள் 6 விதை ஆய்வாளர்களால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக ஆய்வு செய்யப்படுகின்றன. விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விதை குவியல்களிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான அல்லது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

1.2 தொலைநோக்கு மற்றும் நோக்கம்

தொலைநோக்கு (Vision)

  • தரமான விதைகள் விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் சரியான இடத்தில் கிடைப்பதை உறுதி செய்தல்

நோக்கம் (Mission)

  • விதை வணிகம் சட்ட விதிமுறைகளின்படி விதை விற்பனை நடப்பதை உறுதி செய்தல் மற்றும் விதைகள் (கட்டுப்பாட்டு) ஆணை 11983ன் கீழ் விற்பனை உரிமங்களை வழங்குதல்.
  • விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்தல்
  • தரக் கட்டுப்பாட்டு ஆய்விற்காக விற்பனை நிலையங்களிலிருந்து விதை மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புதல்.
  • சந்தேகத்திற்குரிய மற்றும் தரமற்ற விதை குவியல்களுக்கு விற்பனை தடை ஆணை (Stop Sale Order) பிறப்பித்தல்.
  • விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான/துறை ரீதியான நடவடிக்கைகளைத் தொடங்குதல்
  • விவசாயிகளின் வயல் சார்ந்த புகார்களைக் கையாளுதல்,
  • கூட்டங்கள், பயிற்சிகள், செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக விவசாயிகளுக்கும் விதை விற்பனையாளர்களுக்கும் விதைச் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • விதை விற்பனை உரிமம் வைத்திருப்பவர்களுக்கு விதைச் சட்டங்கள் குறித்து அவ்வப்போது பயிற்சி அளித்தல்.

1.3 நிர்வாக அமைப்பு

தொழில்நுட்பப் பிரிவு சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ எலக்ட்ரானிக் வளாகத்தில் இயங்கும் விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை இயக்குநர் (DSC) இந்தத் துறையின் ஒட்டுமொத்தத் தலைவராகச் செயல்படுகிறார் மாநில அளவில் ஒரு இணை இயக்குநர் (விதை ஆய்வு) தரக் கட்டுப்பாட்டுப் பணிகளைக் கண்காணிக்கிறார். ஈரோடு மாவட்ட விதை ஆய்வுத் துணை இயக்குநர் முழு ஈரோடு மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதி (தாராபுரம், மூலனூர், காங்கேயம் குண்டடம், ஊத்துக்குளி மற்றும் வெள்ளக்கோவில் ஒன்றியங்கள்) ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளார். ஒவ்வொரு 1 முதல் 4 ஒன்றியங்களுக்கு ஒரு ஆய்வாளர் வீதம் மொத்தம் ஆறு விதை ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தொழில்நுட்பம் சாரா பிரிவு அலுவலக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள்

  • கண்காணிப்பாளர்-1
  • உதவியாளர்-2
  • இளநிலை உதவியாளர் 2
  • தட்டச்சர்-1
  • ஓட்டுநர் -1 (காலியிடம்)
  • அலுவலக உதவியாளர்-1 (காலியிடம்)

1.4 விதை தரக் கட்டுப்பாட்டுப் பிரிவின் சாதனைகள் (01.042021 முதல் 31.01.2026 வரை)

  1. தரமான விதைகள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய இதுவரை 27,717 விதை விற்பனை நிலையங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
  2. முளைப்புத்திறன். இனத்தூய்மை மற்றும் பி.டி மரபணு (பருத்திக்கு) ஆகியவற்றைச் சோதிக்க 22,815 அலுவலக விதை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
  3. தர நிர்ணயத்திலிருந்து மாறுபட்ட அல்லது சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 987 விதை குவியல்களுக்கு விதை விற்பனை தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  4. விதை விற்பனை தடை செய்யப்பட்ட விதைகளின் மொத்த அளவு 1,510.51 மெட்ரிக் டன்.
  5. விதை விற்பனை தடை செய்யப்பட்ட விதைகளின் மதிப்பு73 இலட்சம் ரூபாய்.
  6. விதை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இதுவரை 383 விதை குவியல்கள் தரமற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 349 விதை விற்பனையாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும், 34 விற்பனையாளர்கள் விநியோகஸ்தர்கள்/உற்பத்தியாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
  7. விதைக் கொடுக்கல் வாங்கலில் ஒவ்வொரு நிலையிலும் தரத்தை உறுதிப்படுத்த விதை உற்பத்தி மையங்கள், விநியோகப் புள்ளிகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருந்து இதுவரை 10,500 சேவை மாதிரிகள் (Service Samples) எடுக்கப்பட்டுள்ளன.

web address:

https://seedcertification.tn.gov.in/

Office Email: ddsiede@gmail.com