வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை
வேளாண்மை விற்பனை மற்றம் மற்றும் வேளாண் வணிகத்துறை தமிழ்நாடு 2001 முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அறுவடை பிந்தய மேலாண்மை, வேளாண் சந்தைப்படுத்துதல், உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மற்றும் நாட்டின் பொருளாதார கொள்கை தாராளமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து வேளாண் விளைபொருட்களின் சந்தைப்படுத்தலை ஒழுங்குபடுத்துதல் என்ற முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
நோக்கங்கள்
- சந்தைப்படுத்துதலுக்கான உள்கட்டமைப்பு மற்றும் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மையை உருவாக்குவதன் மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதில் துறை கவனம் செலுத்தி ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்து வருகிறது.
- விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க விவசாயி உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) மற்றும் அழுகக்கூடிய வேளாண் பொருட்களுக்கான சங்கிலி தொடர் மேலாண்மை செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
- மின்னணு தேசிய வேளாண் வர்த்தகம் (e-NAM), ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், உழவர் சந்தைகள், குளிர்பதன கிடங்குகள், சிறப்பு சந்தை வளாகங்கள் மற்றும் முதன்மை பதப்படுத்தும் மையங்கள் போன்றவற்றில் மின்னணு வர்த்தக வசதிகளை உருவாக்கி உள்ளது.
அமைப்பின் தகவல்
- வேளாண்மை துணை இயக்குநர், (வேளாண் வணிகம்) ஈரோடு.
மின்னஞ்சல் ddab.erode@gmail.com
தொலைபேசி எண். 0424 2903889
- வேளாண்மை துணை இயக்குநர் / செயலாளர்,
ஈரோடு விற்பனைக்குழு, ஈரோடு.
மின்னஞ்சல் rmc.erode@gmail.com
தொலைபேசி எண். 0424 2339102
திட்டங்கள்
- உழவர் சந்தைகள்
விவசாய துறையின் சந்தைப்படுத்துதல் என்பது விவசாயப் பொருட்களின் பணமதிப்பை நிர்ணயித்து அவற்றை இறுதி நுகர்வோரிடம் சேர்க்கும் முக்கிய செயலாகும். பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கிராம அளவிலான சந்தைகள். திருவிழாக்கள், மண்டிகள், கூட்டுறவு சங்ககள் போன்றவற்றின் மூலம் விற்பனை செய்கின்றனர். இந்த விவசாய சந்தைப்படுத்துதல் முறையில் இடைத்தரகர்கள் விவசாயிகளையும், நுகர்வோர்களையும் சுரண்டுகின்றனர்.
விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையிலான இடைதகர்களை நீக்குவதற்காக தமிழ்நாடு அரசு 1999 ஆம் ஆண்டு உழவர் சந்தை என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பொதுவாக இடைதகர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் விவசாய பொருட்களை வாங்கி அதிக விலைக்கு நுகர்வோர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதை குறைக்க விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் அதிக நன்மை கிடைக்கும் வகையில் உழவர் சந்தை துவங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உழவர் சந்தைகள் அமைந்துள்ள இடங்கள்:
| 1 | சம்பத்நகர் | பாலசுப்பரமணியன் நகர், இடையன்காட்டு வலசு, ஈரோடு | |
| 2 | பெரியார் நகர் | பெரியார் நகர் புங்கா அருகில், ஈரோடு | |
| 3 | பெருந்துறை | வார சந்தை, பவானி ரோடு, கருமாண்டிசெல்லிபாளையம், பெருந்துறை | |
| 4 | கோபிசெட்டிபாளையம் | வார சந்தை அருகில், மொடச்சூர், கோபிசெட்டிபாளையம் | |
| 5 | சத்தியமங்கலம் | மகளிர் மேல்நிலை பள்ளி அருகில், அரியப்பன்பாளையம், சத்தியமங்கலம் | |
| 6 | தாளவாடி | விற்பனைக்கூட வளாகம், ஓசுர் ரோடு, தாளவாடி |
- தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் என்பது 2019 -2020 முதல் 2025 – 2026 வரை ஆறு ஆண்டுகளுக்கு இரண்டு துணைப்படுகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அ) கீழ்பவானி துணைப்படுகை
ஆ) மேட்டூர் நொய்யல் சங்கம் துணைப்படுகை
நோக்கம்
- விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல் மேலும் ஊக்குவிப்பதற்காக முதலீட்டு மானியம் மற்றும் வணிக விரிவாக்க மானியங்களை வழங்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வணிக விரிவாக்க மானியத்தை வழங்குதல்.
- வேளாண் வணிக மேம்பாட்டு தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை உருவாக்குதல்
- விவசாய விளைபொருட்களுக்கு அதிக வருமானம் பெற ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை நவீனமயமாக்குதல்.
முக்கிய சாதனைகள்
- புதியதாக உருவாக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.60 இலட்சம் மானியம் வழங்குதல்.
- ஏற்கனவே உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வணிக விரிவாக்கத்திற்கு ரூ.30 இலட்சம் மானியம் வழங்குதல்
- தொழில் முனைவோர்களால் புதியதாக துவங்கப்படும் தொழிலுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 இலடசம் மானியமாகவும், ஏற்கனவே துவங்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு விரிவாக்கத்திற்காக 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை நவீன வசதிகளை கொண்டு நவீனமயமாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கூடிய சேமிப்பு கிடங்கில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
- எழுமாத்தூர் மற்றும் அவல்புந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு பரிமாற்றத் தக்க கிடங்கு இரசீது (e-NWR) வசதிக்காக 2000 மெட்ரிக் டன் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
3.வாழை மற்றும் காய்கறிகளுக்கான தமிழ்நாடு விநியோகச் சங்கிலி மேலாண்மை திட்டம்
தமிழ்நாடு விநியோகச் சங்கிலி மேலாண்மைத் திட்டமானது (TNSC) காய்கறிகள் மற்றும் தினைகளின் விநியோகச்சங்கிலியை ஒருங்கிணைத்து வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அளுக்குளி மற்றும் அந்தியுர் ஆகிய இரண்டு முதன்மை பதப்படுத்தும் மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் சுத்தம் செய்தல், கழுவுதல், வரிசைப்படுத்துதல், தரப்படுத்துதல், பேக்கிங் செய்தல், அரைத்தல் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான பேக் ஹவுஸ், குளிர்பதன சேமிப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
4.உ ழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்
சிறு மற்றும் குறு விவசாயிகளை விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளாக ஒருங்கிணைக்கும் ஒரு புதுமையான திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியது.
கடன் திரட்டலுக்காக கூட்டு விவசாயத்தை ஊக்குவித்தல், சிறந்த தொழில்நுட்பம் மற்றும் பயனுள்ள முன்னோக்கி மற்றும் பின்னோக்கி இணைப்புகளை எளிதாக்குதல்
திட்டத்தின் நோக்கங்கள்
- கிராம அளவில் விவசாயிகளை குழுக்காளக அணிதிரட்டுதல் மற்றும் அவர்களின் சங்கங்களை உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளில் (FPOs) உருவாக்குதல்
- உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட சிறந்த நடைமுறைகள், செலவு குறைந்த விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் குழுக்களில் திரட்டுதல்
- விவசாயிகள் கடன் வசதிகள் மற்றும் சந்தைகளை அணுகுவதில் உள்ள தடைகளை நீக்குதல்
- சிறந்த இலாபம் மற்றும் நிலைத்தன்மைக்காக கூட்டு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கு சாதகமான சுழலை உருவாக்குதல்
- விவசாயத் தொழிலில் விவசாயிகளின் ஆர்வத்தைக் தக்கவைத்துக்கொள்வது
- மேம்பட்ட உற்பத்தித் திறனுக்காக சிறந்த விவசாய நடைமுறைகளை உணர்த்துவதன் மூலம் விவசாயிகளின் திறனை வலுப்படுத்துதல்
- சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் சந்தைப்படுத்துதல் வாய்ப்புகளுக்காக உற்பத்தியாளர் குழுக்களை இணைப்பது உட்பட நியாயமான மற்றும் ஊதியம் தரும் சந்தைகளுக்கான அணுகலை எளிதாக்குதல்
- சந்தை சார்ந்த உற்பத்திக்கு தரமான உள்ளீடுகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான தொகுப்புகளை மேம்படுத்துதல்
- விவசாய விளைபொருட்களின் மதிப்பு கூட்டலை உறுதி செய்தல் மற்றும் வேளாண் வணிக நிறுவனங்களை வேளாண் வணிக நிறுவனமாக ஊக்குவித்தல்
இந்தத் துறை 2014 -15 முதல் FPOக்களை ஆதரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 2015-16 முதல் FPO க்கள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் (NADP) தேசிய நிலையான வேளாண்மை இயக்கும் (NMSA) மற்றும் சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பின் (SFAC) செயல்முறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 10000 FPO க்கான உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் இதுவரை 13 FPO க்கான TNSFAC மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.
நிறுவன கடன்
இந்தத் துறை பின்வரும் மூன்று திட்டங்கள் மூலம் நிறுவனக் கடன்களைப் பெறுவதன் மூலம் FPC களுக்கு உதவி வருகிறது.
- அளவை அதிகரிக்க மெஸ்ஸானைன் மூலதன உதவி (MCA)
- கடன் பெறுவதற்கான கடன் உத்தரவாதத் திட்டம் (CGS)
- சுழல் நிதி ஆதரவு (RFS)
இந்த திட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் NABKISAN (நபார்டின் துணை நிறுவனம்) கூட்டாக செயல்படுத்தப்படுகிறது.
- 100 மதிப்புக் கூட்டல் மையங்கள் அமைத்தல்
அறுவடை காலங்களில் சேமிப்பு மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் லாபகரமான விலையை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
மானியம்
இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி வரை மொத்த முதலீட்டைக் கொண்ட புதிய திட்டங்களுக்கு 25 சதவீதம் வரை மூலதன மானியம் வழங்கப்படும்.
கூடுதலாக, பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் / பழங்குடியினர் பயனாளிகள் கூடுதலாக 10 சதவீதம் மானியம் பெற தகுதியுடையவர்கள்.
மானியம் அனைத்து நிகழ்வுகளிலும் ரூ.15 கோடியாக இருக்கும்.
ஐந்து ஆண்டுகளுக்கு 5 % வட்டி மானியம் வழங்கப்படும். இதன் மூலம் வீணாவதைக் குறைக்கிறது.
பயனாளிகளுக்கான தகுதி
- புதிய தொழில் முனைவோர்
- வேளாண்மை சார் தொழில் முனைவோர்
6.கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டம் (KAVIADP)
- உலர்களம் அமைத்தல்
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உலர்த்துவதற்கு வசதியாக, ஈரப்பத்த்தை உகந்த அளவிற்குக் குறைப்பதற்காக உலர்த்தும் கூடங்கள் கட்டப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பவு உலர்த்தும் கூடங்கள், அதாவது மொடச்சுர் (கோபிசெட்டிபாளையம்) 60 வேலம்பாளையம் (மொடக்குறிச்சி) ஆண்டிபாளையம் மற்றும் கரட்டுப்பாளையம் (நம்பியுர்) ஆகியவை விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டன.
உலர்த்தும் தளத்துடன் கூடிய தரம்பிரிப்பு கூடம் அமைத்தல்
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உலர்த்துவதற்கும், ரை நாட்களில் விளைபொருட்களை திறம்பட சேமித்து வைப்பதற்கும் வசதியாக உலர்த்தும் முற்றங்கள் கொண்ட தரம் பிரித்தல் கூடம் கட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கெட்டிசமுத்திரம் புதுப்பிர் கடவு (சென்னிமலை)குட்டப்பாளையம் (அந்தியுர்) சத்தியமங்கலம் பெரியகள்ளிப்பட்டி (பவானிசாகர்) மற்றும் கொண்டயம்பாளையம் (டி.என்பாளையம்) ஆகிய உலர்த்தும் தளங்கள் கட்டப்பட்டுள்ளன.
- தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்
தமிழ்நாடு தினை முதன்மை பதப்படுத்தும் இயந்திரகளுக்கு 75 % அல்லது அதிகபட்ச மானியம் ரூ.18.75 லட்சம் என்ற முறையில் 60% மற்றும் 40% வீதம் இரண்டு தவணைகள் வகையில் தமிழ்நாடு தினை முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்கள் திட்டம்.
- வேளாண் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களுக்கு ஆதரவு
வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த தொடக்க நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் நோக்கங்கள், நிலைத்தன்மை மற்றும் வணிகத் திட்டத்தின் அடிப்படையில் மானியங்கள் வழங்குதல்.
தகுதிகள்
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் புத்தொழில் நிறுவனத்திற்கான டான்சிம் (TANSIM) அல்லது ஸ்டார்ட்அப் இந்தியா (STARTUP INDIA) நிறுவனத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- பயனாளி நிறுவனமானது கம்பெனிகள் சட்டம் 2013 அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம் (LLP) 2008 அல்லது பதிவு செய்யப்பட்ட கூட்டாண்மை நிறுவன சட்டம் 1932 ஆகிய ஏதாவதொனில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் இந்திய நாட்டை சேர்ந்த புத்தாக்க நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
- கடந்த மூன்று வருடங்களின் சராசரி இலாபமானது ரூபாய் ஐந்து இலட்சத்திற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
- அந்நிறுவனம் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு அதன் தயாரிப்புகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அதிக வேலை வாய்ப்பு, அதிக வருமானம் மற்றும் சமூக மேம்பாட்டை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும்.
- அரசு அல்லது அரசுசார்ந்த பிற நிறுவனங்களிடமிருந்தோ எந்த கடன் நிலுவையும் வைத்திருத்தல் கூடாது.
மானியம்
புதிதாக தொடங்கப்பட்டுள்ள புத்தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ரூ.10.00 இலட்சம் வரையிலும்,
ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்த ரூ.25.00 இலட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.
- அக்மார்க் சான்றளிப்பு
அக்மார்க் என்பது இந்திய அரசால் வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களுக்கு வழங்கப்படும் ஒரு சான்றளிப்பு குறியீடு ஆகும். இது வேளாண் விளைபொருள் (தரப்படுத்துதல் மற்றும் குறியிடுதல்) சட்டம், 1937 மற்றும் வேளாண் விளைபொருள் (தரப்படுத்துதல் மற்றும் குறியிடுதல்) விதிகள், 1988 ஆகியவற்றின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின் அடிப்படையில் தரம்பிரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த அமைப்பு, இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வு இயக்குநரகம் மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் அமைந்துள்ள மாநில அக்மார்க் ஆய்வகங்கள், அக்மார்க் திட்டத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை, அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பாளர்களிடமிருந்து வேளாண் பொருட்களின் மாதிரிகளை சேகரித்தல், அவற்றை இயற்பியல் மற்றும் இரசாயன பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துதல் மற்றும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பொருட்களுக்கு தகுந்த தரக்குறியீடு வழங்கப்படுவதை உறுதி செய்கின்றன.
மொத்தம் 248 வகையான வேளாண் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்கள் அக்மார்க் சான்றளிப்பு திட்டத்தின் கீழ் தர நிர்ணயம் செய்யப்பட்டு குறியிடப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மாநில அக்மார்க் ஆய்வகங்கள்
- மாநில அக்மார்க் ஆய்வகம், ஈரோடு 1
முகவரி: மார்கெட் கமிட்டி தலைமை அலுவலக வளாகம், வித்யா நகர், திண்டல், ஈரோடு – 638012
மின்னஞ்சல்: saglerode1@gmail.com
- மாநில அக்மார்க் ஆய்வகம், ஈரோடு 2
முகவரி: L 326, 327 பெரியார் நகர், சூரம்பட்டி நால் ரோடு, ஈரோடு – 638001.
மின்னஞ்சல்: saglerode2@gmail.com
- மாநில அக்மார்க் ஆய்வகம், சித்தோடு
முகவரி: 43, வானியர் வீதி, சத்தி ரோடு, சித்தோடு, ஈரோடு – 638102.
மின்னஞ்சல்: chithodesagl@gmail.com
- மாநில அக்மார்க் ஆய்வகம், பெருந்துறை
முகவரி: மஞ்சள் மார்க்கெட் கமிட்டி வளாகம், சிலேட்டர் நகர், சானிட்டோரியம் அஞ்சல், பெருந்துறை, ஈரோடு – 638053.
மின்னஞ்சல்: saglperundurai@gmail.com
அக்மார்க் திட்டத்தின் நோக்கம்
அக்மார்க் திட்டத்தின் முதன்மை நோக்கமானது,
- தூய்மையான, பாதுகாப்பான மற்றும் உயர்தரமான வேளாண் பொருட்கள் நுகர்வோருக்கு கிடைக்கச் செய்வதன் மூலம் அவர்களை பாதுகாப்பது.
- தரத்தை அடிப்படையாகக் கொண்ட சந்தைப்படுத்தலை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு, அவர்களின் விளைபொருட்களுக்கு கூடுதல் இலாபம் பெற உதவுதல்.
அங்கீகாரச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
- நிறுவனத்தின் பதிவு சான்றிதழ்
- உரிமையாளர் / அங்கீகரிக்கப்பட்ட நபரின் KYC விவரங்கள் – நிரந்தர கணக்கு எண், ஆதார், ஓட்டுநர் உரிமம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்
- FSSAI உரிமம்
- GST சான்றிதழ்
- தனிநபர் உரிமம் உறுதிமொழி/ கூட்டுத்தொழில் ஒப்பந்தம்
- வளாக உரிமை விவரங்கள் – வாடகை ஒப்பந்தம் / அலகின் வரிவசூல் ரசீது
- வங்கிக் கணக்கு விவரம்
- அலகின் வரைபடம் / தளவமைப்பு
- இயந்திரங்களின் பட்டியல் மற்றும் அவற்றின் கொள்ளளவு விவரங்கள்
- பிராண்ட் பெயர்/ பிராண்ட் லேபில் நகல் (வர்த்தக முத்திரை சான்றிதழ் இருப்பின் சேர்க்கவும்)
- விண்ணப்பப் படிவங்கள் – A, A1, A2
- வேளாண்மை அலுவலர் (இரசாயனம்), அக்மார்க் ஆய்வகம் அவர்களால் வழங்கப்படும் ஆய்வு அறிக்கை – படிவம் A3, A5
- தொழிலாளர்களின் மருத்துவச் சான்றிதழ்
இணையதளம்
- agmarkonline.dmi.gov.in – அங்கீகாரச் சான்றிதழ் (உரிமம்), அச்சக அனுமதி மற்றும் தனியார் ஆய்வக அங்கீகாரம் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்க பயன்படுத்தப்படும் இணையதளம்.
- bharatkosh.gov.in – அங்கீகாரச் சான்றிதழ், அச்சக அங்கீகாரம், ஆய்வக அங்கீகாரம், வேதியியலாளர் பயிற்சி மற்றும் அக்மார்க் முத்திரைச் சீட்டு போன்றவற்றிற்குரிய கட்டணங்களை செலுத்த பயன்படுத்தப்படும் இணையதளம்.
கட்டண விவரங்கள்
- புதிய அங்கீகாரச் சான்றிதழ் (உரிமத்தின் செல்லுபடி காலம் – 5 ஆண்டுகள்)
அ) தனியார் லிமிடெட் நிறுவனங்கள் / இதர நிறுவனங்கள் – ரூ.10,000/-
ஆ) உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் – ரூ.500/-
- அங்கீகாரச் சான்றிதழ் புதுப்பித்தல்
அ) தனியார் லிமிடெட் நிறுவனங்கள் / இதர நிறுவனங்கள் – ரூ.5,000/-
ஆ) உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் – ரூ.500/-