புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்
பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற் கல்வி படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கிகள் (அ) தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் ரூ.10 இலட்சம் முதல் ஐந்து கோடி வரை கடனுதவி பெற்று தொழில் துவங்க செய்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கி வேலை வாய்ப்பினை அதிகரிக்கச் செய்வது.
திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள்
ஐ.டி.ஐ., பட்டய படிப்பு (டிப்ளமோ), இளங்கலை பட்டம் அல்லது தொழில் பயிற்ச்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொது பயனாளிகளுக்கு வயது வரம்பு 21 வயதிற்கு மேல் அதிகபட்சமாக 35 வரை இருத்தல் வேண்டும். சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு அதிகபட்ட வயது வரம்பு 45.
திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்
இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.10.00 இலட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.500.00 லட்சம் வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் துவங்கலாம். பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25% அதிக பட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை முதலீட்டு மானியமும் 3% வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் http://www.msmeonline.tn.gov.in/needs/ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி தொலைபேசி எண்: 04343 235567 முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பயனாளி:
பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற் கல்வி படித்த இளைஞர்கள்.
பயன்கள்:
பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25% அதிக பட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை முதலீட்டு மானியமும் 3% வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் http://www.msmeonline.tn.gov.in/needs/ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.