Close

மக்கள்தொகை அடிப்படையிலான தொற்றாநோய்களை கண்டறியும் திட்டம்

தேதி : 20/11/2017 - | துறை: சுகாதாரம்

பொதுவாக மொத்த மக்கள்தொகைகளை 30% – 40% மட்டுமே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை மேற்கொள்கின்றனர். மீதமுள்ள மக்களுக்கு தொற்றாநோய்களுக்கான கண்டறியும் பரிசோதனைகள் அடைவது கடினமாகவே உள்ளது எனவே மக்கள்தொகையின் அடிப்படயிலான துனை சுகாதார நிலைய அளவில் தொற்றாநோய்களுக்கான கண்டறியும் பரிசோதானைகளை மேற்கொள்வது அவசியமகிறது.

மக்கள்தொகை அடிப்படையிலான தொற்றாநோய்களை கண்டறியும் இத்திட்டம், ஈரோடு மாவட்டத்தில் 20 நவம்பர் 2017 அன்று மேலும் புதுக்கோட்டை,பெரம்பலூர் மாவட்டத்துடன் சேரத்து ஆரம்பிக்கப்பட்டது.ஒவ்வொரு துனை சுகாதார நிலைய அளவில் ஒரு களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இப்பணியை மெற்கொள்கின்றனர்.

இத்திட்டத்தில் ஒவ்வொரு களப்பணியாளர்களும் வீடு வீடாக சென்று 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இரத்தகொதிப்பு மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்கின்றனர்.இப்பறிசோதனையில் அதிக இரத்தகொதிப்பு மற்றும் சர்க்கறையின் அளவு உள்ளவற்களை நோயை உறுதி செய்ய அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பிவைக்கின்றனர். மேலும் 30 வயதிற்க்கு மேற்ப்பட்ட அனைத்து பெண்களையும் கர்பப்பைவாய் மற்றும் மார்பக பறிசோதானைக்கான அரசு ஆரம்ப சுகாதார நிலையஙளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

30 வயதிற்குமேற்பட்ட அனைவரும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி பயன் பெறலாம்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

வீடு வீடாக வரும் களப்பணியாளர்களிடம் இச்சேவையை பெற்றுக்கொள்ளாம்.

பயனாளி:

30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்

பயன்கள்:

இரத்தகொதிப்பு மற்றும் இரத்த சர்க்கரையின் அளவு பரிசோதனை