மண்வள அட்டை இயக்கம்
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து “மண்வள அட்டை இயக்கம்” எனும் புதிய இயக்கத்தினை 2015 -16ம் ஆண்டு தொடங்கி அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிகர சாகுபடி பரப்பில் நிலையான நீர்ப்பாசன வசதி 58385 ஹெக்டேர், மானாவரி பரப்பு 1,27,370 ஹெக்டர் மொத்தம் 1,85,675 ஹெக்டர் பரப்பளவில் 10 வட்டாரங்கள் பயன்பெறும் வகையில் மண் மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டு வருகிறது. நிலையான நீர்ப்பாசன வசதியுள்ள நிலத்தில் 2.5 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரியும் மானாவரி நிலப்பரப்பில் 10 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரியும் மொத்தம் 37340 மாதிரிகள் இத்திட்டத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டு இலக்கான 18650 மண் மாதிரிகள் வோளண்மைதுறை மூலமாக சேகரம் செய்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மண் மாதிரிகள் உதவி வேளாண்மை அலுவலர்களால் விவசாயிகள் நிலத்தில் நேரடியாக உலக இடங்காணல் அமைப்பு கருவியினைக் கொண்டு நிர்ணயம் செய்து மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எடுக்கப்படும் மண் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் மண்ணின் நயம், கார, அமில நிலை, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற பேரூட்டச்சத்துக்கள் அளவையும், கால்சியம், மக்னீசியம் போன்ற 2-ம் நிலை சத்துக்கள் மற்றும் ஜிங்க், மாங்கனீசு இரும்பு, போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் தெளிவாக அறிய இயலும்.
இத்திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2015-16 மற்றும் 2017-18 ல் 37340 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இதுவரை 243115 மண்வள அட்டைகள் விவசாய மற்றும் பண்ணைக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மண்வள அட்டை பரிந்துரையின்படி, பயிர்களுக்கு தேவையான அளவு உரங்கள் மட்டும் பயன்படுத்தி விவசாயிகள் இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்ற இலக்கினை அடைந்து வாழ்வின் தரத்தினை உயர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பயனாளி:
அனைத்து விவசாயிகளும் பயனடையலாம்
பயன்கள்:
மண் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் மண்ணின் நயம், கார, அமில நிலை, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற பேரூட்டச்சத்துக்கள் அளவையும், கால்சியம், மக்னீசியம் போன்ற 2-ம் நிலை சத்துக்கள் மற்றும் ஜிங்க், மாங்கனீசு இரும்பு, போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் தெளிவாக அறிய இயலும்