அரசு அருங்காட்சியகம் ஈரோடு
முகவரி: அரசு அருங்காட்சியகம், வ.உ.சி.பூங்கா, வளாகம், ஈரோடு – 638 003.ஈரோடு
அரசு அருங்காட்சியகம் 1987 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் கலாச்சார ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கு பார்வையிடுவதற்கும், அரிய வரலாற்று தகவல்களை அறிந்து கொள்வதற்க்கும், ஏற்ற இடம் ஆகும். இந்த அருங்காட்சியகம் கலை, மானுடவியல் மற்றும் தொல்லியல் தொடர்பான பொருட்களின் தகவல் களஞ்சியமாக உள்ளது. அரசாங்க அருங்காட்சியகம் பிராந்திய கலை மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் முக்கிய தொகுப்பு ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் 1987 ஆம் ஆண்டு கொங்கு சோழ சாம்ராஜ்யத்திற்குச் சொந்தமான கல்வெட்டுகள் சுற்றுலாப்பயணிகளுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டன.
இங்கு பர்கூரில் உள்ள கைவினைப்பொருட்கள் மற்றும் கற்களாலான கைவினைப்பொருட்கள் ஆகியவை முக்கியமானதாகும். மேலும், தஞ்சாவூர் ஓவியங்கள், கையெழுத்துப் பிரதி மற்றும் பிற முந்தைய வரலாற்று சின்னங்களை காட்சிப்படுத்த தனி பிரிவுகள் உள்ளன. இது தவிர, இந்த அருங்காட்சியகத்தில் வீட்டு தாவரவியல் மற்றும் விலங்கியல் மாதிரிகள் மற்றும் பனை-இலை கையெழுத்துப் பிரதிகள் விரிவான தொகுப்புடன் இடம்பெற்றுள்ளன.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
கோயம்புத்தூர் விமான நிலையம் (90 கி.மீ .)
தொடர்வண்டி வழியாக
ஈரோடு
சாலை வழியாக
எல்லா இடங்களிலும் சாலையில் இணைக்கப்பட்டுள்ளது