Close

காணத்தக்க இடங்கள்

ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்தி மற்றும் கைத்தறி துணி தயாரிப்பில் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இம்மாவட்டத்தில் பவானி கூடுதுறை, கொடிவேரி அணை, சென்னிமலை, பவானிசாகர், பண்ணாரிஅம்மன் கோவில், பாரியூர், கொடுமுடி ஆகிய முக்கியமான சுற்றுலா இடங்களாக உள்ளன.

பவானி

காவிரி, பவானி மற்றும் அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது வடஇந்தியாவில் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தைப் போன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. சித்திரை தேர் திருவிழா முக்கியமான திருவிழா ஆகும். ஈரோட்டிலிருந்து 15கி.மீ.தொலைவில் பவானி கூடுதுறை அமைந்துள்ளது.

கொடிவேரி அணை

ஈரோட்டிலிருந்து 65கி.மீ. தொலைவிலும், கோபிசெட்டிபாளையத்திலிருந்து 12கி.மீ. கொடிவேரி அணை நீர்த்தேக்கம் உள்ளது. இது ஒரு பொழுது போக்கு சுற்றுலாத்தலமாகும். இங்கு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு அணை, நீர்த்தேக்கம் மற்றும் இதன் இயற்கையான சுற்றுச்சூழல் பகுதி அனைத்தும் காட்சிகினிய இடமாக திகழ்வதுடன் உள்ளுர் சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கு சிறப்பிடமாகவும் விளங்குகிறது. சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக குழந்தைகள் விளையாட்டு கருவிகள், படகில்லம், கழிப்பிட வசதிகள், உடை மாற்றும் அறைகள் மற்றும் புல்தரைகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கொடுமுடி

ஈரோட்டிற்கும் கரூருக்கும் இடையில் ஈரோட்டிலிருந்து 38கி.மீ. தென்கிழக்கே, கரூரிலிருந்து 28 கி.மீ. வடமேற்கே காவிரி தென்கரையில் இந்த ஊர் உள்ளது. இவ்வூரிலிருந்து 18 கி.மீ. மேற்கே சிவகிரி வழியாக சென்னிமலை உள்ளது. மிகவும் செழிப்பான இந்த ஊரில் ஒரே ஆலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் பக்தா;களுக்கு காட்சி தருகின்றனர். இங்குள்ள சிவனுக்கு மகுடேஸ்வரா், விஷ்ணுக்கு வீரநாராயண பெருமாள் என்று பெயர். இதைப்போல் மும்மூர்த்திகளும் ஒன்றாக கோவில் கொண்டருளியுள்ள இடங்களை காணுவது அரிதாகும்.

சென்னிமலை

சென்னிமலை சுப்ரமணியசுவாமி கோவில் பழமையான கோவில் ஆகும். ஈரோட்டிலிருந்து 30கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மலையின்மீது அமைந்துள்ள கோவிலுக்கு செல்ல 1320 படிக்கட்டுகள் உள்ளது. வாகனங்கள் செல்ல 4கி.மீ. தார்சாலையும் உள்ளது. மகாமண்டபம், கலையெழில் மிக்கவிதானம் வள்ளி தெய்வாணை சிற்பங்கள் இக்கோவிலில் சிறப்புக்கு பெருமை சோ;ப்பவையாகும். தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் ஆகிய திருவிழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கட்டு ஈரோட்டிலிருந்து 76கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது. பவானிசாகரின் நீர்த்தேக்கப்பகுதி மலைகள் சூழ்ந்த எழில் நிறைந்த இயற்கை காட்சியுடன் திகழ்கிறது. பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் பெரிய பூங்கா ஒன்று பவானிசாகாpல் அமைந்துள்ளது.

பண்ணாரிஅம்மன் கோவில்

பண்ணாரிஅம்மன் கோவில் கோவையிலிருந்து 83கி.மீ. வடகிழக்கே பவானிசாகர் அணைக்கட்டிலிருந்து சத்தியமங்கலத்திலிருந்தும் 10 கி.மீ.வடமேற்கே மைசூர் செல்லும் சாலையில் அமைந்தள்ளது. இந்த இடம் மேற்கு தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் மிக பிரபலமானது இங்குள்ள மாரியம்மன் ஆலயமாகும். இந்த அம்மன் சுயம்பு வடிவமாக அமைந்தது தனி சிறப்பாகும். இத்திருக்கோயில் ஒரு காட்டுப்பகுதியில் அமைந்திருந்தாலும், இக்கோவில் கோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம், ஆகியவற்றுடன் விளங்குகிறது. மண்டபத்தூண்கள் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்தவை. கருவறையில் பண்ணாரிஅம்மன் பத்மபீடத்தில் வலக்கால் மடித்தும் இடதுகால் ஊன்றியும் நான்கு திருகரங்களுடன் காட்சி தருகிறார். இக்கோவிலுக்கு மேற்கே 3 மைல் தூரத்தில் ஒரு பெரிய ஆலமரத்தில் மாதேஸ்வரர் சுவாமிக்கு பூஜை செய்துவிட்டு வந்து பிறகு மாரியம்மன் பூச்சாற்றி வந்தார்கள். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் விழா நடைபெற்று வருகிறது.