ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் 22.05.2023 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திரு. ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் 2015 ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.
அவர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், காரக்பூரில் (IIT Kharagpur) தொழில்நுட்ப இளங்கலை (B.Tech) மற்றும்
வேளாண்மை மற்றும் உணவுப் பொறியியலில் தொழில்நுட்ப முதுகலை [M.Tech (Honors)] பட்டமும் பெற்றுள்ளார்.
மேலும் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
Logistics startup நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, இந்திய ஆட்சிப் பணி பணியில் சேர்ந்தார்.
அவர் இதற்கு முன்பு கீழ்கண்ட பதவிகளை வகித்துள்ளார்.
1. செயல் இயக்குனர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் (CMWSSB),
2. ஆணையர், கோவை மாநகராட்சி.
3. மண்டல துணை ஆணையர் (தெற்கு), பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி)
4. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), கடலூர்.
5. சார் ஆட்சியர், பத்மநாபபுரம்