சுகாதாரம்
மக்கள்தொகை அடிப்படையிலான தொற்றாநோய்களை கண்டறியும் திட்டம்
பொதுவாக மொத்த மக்கள்தொகைகளை 30% – 40% மட்டுமே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை மேற்கொள்கின்றனர். மீதமுள்ள மக்களுக்கு தொற்றாநோய்களுக்கான கண்டறியும் பரிசோதனைகள் அடைவது கடினமாகவே உள்ளது எனவே மக்கள்தொகையின் அடிப்படயிலான துனை சுகாதார நிலைய அளவில் தொற்றாநோய்களுக்கான கண்டறியும் பரிசோதானைகளை மேற்கொள்வது அவசியமகிறது. மக்கள்தொகை அடிப்படையிலான தொற்றாநோய்களை கண்டறியும் இத்திட்டம், ஈரோடு மாவட்டத்தில் 20 நவம்பர் 2017 அன்று மேலும் புதுக்கோட்டை,பெரம்பலூர் மாவட்டத்துடன் சேரத்து ஆரம்பிக்கப்பட்டது.ஒவ்வொரு துனை சுகாதார நிலைய அளவில் ஒரு களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இப்பணியை மெற்கொள்கின்றனர். இத்திட்டத்தில் ஒவ்வொரு களப்பணியாளர்களும் வீடு வீடாக சென்று 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இரத்தகொதிப்பு மற்றும்…
தொற்றாநோய் தடுப்பு பிரிவு
தமிழகத்தில் 10.4% பேர் நீரிழிவு நோயாலும், 20 % பேர் உயர் இரத்த அழுத்தத்தாலும், 23 % பேர் உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருதய நோயிகளிலான இறப்பு விகிதம் தமிழகத்தில் 360 டொ 430 / 100000 ஆகும். இது இந்திய அளவில் மிக அதிகமாக உள்ளது. எனவே தொற்றா நோய்களானது மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்ப்படுத்துகின்றது. இப்பிரிவில் 30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இரத்தகொதிப்பு, சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை கொடுக்கபடுகிறது. மேலும் 30 வயதிற்க்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மார்பக புற்று நோய் பரிசோதனை மற்றும் கர்ப்பபைவாய் புற்றுநோய் பரிசோதனை…