விவசாயம்
Filter Scheme category wise
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)
அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது ஆகும். மேலும், அட்மா திட்டத்தின் வாயிலாக இதர துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம். அட்மா திட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, மீன் வளர்ப்புத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து அவ்வப்போது விவசாயிகளுக்கு பயிற்சி, கண்டுனர்தல் சுற்றுலா, செயல்விளக்கங்கள், பண்ணைப்பள்ளி மற்றும் வெளிமாநில சுற்றுலாக்களின் மூலம் விவசாயிகளுக்கு புதிய…
மண்வள அட்டை இயக்கம்
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து “மண்வள அட்டை இயக்கம்” எனும் புதிய இயக்கத்தினை 2015 -16ம் ஆண்டு தொடங்கி அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிகர சாகுபடி பரப்பில் நிலையான நீர்ப்பாசன வசதி 58385 ஹெக்டேர், மானாவரி பரப்பு 1,27,370 ஹெக்டர் மொத்தம் 1,85,675 ஹெக்டர் பரப்பளவில் 10 வட்டாரங்கள் பயன்பெறும் வகையில் மண் மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டு வருகிறது. நிலையான நீர்ப்பாசன வசதியுள்ள நிலத்தில் 2.5 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரியும் மானாவரி நிலப்பரப்பில் 10 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரியும் மொத்தம் 37340 மாதிரிகள் இத்திட்டத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது….
பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டம்
பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டம் மூலமாக, விவசாயிகள் நீடித்த நிலையான விவசாயம் மேற்கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. நோக்கம் அசாதாரன சூழ்நிலைகளால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு மற்றும் பயிர் பாதிப்பு ஏற்படும் போது நிதி உதவி வழங்குதல். விவசாயிகளுக்கு புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களை எடுத்துரைத்து உற்பத்தியை மேம்படுத்த செய்தல். தொடர்ந்து விவசாயம் செய்வதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெற விவசாயிகளுக்கு வழிவகை செய்தல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் தகுதியுடையவர்கள். பயனாளி: பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் தகுதியுடையவர்கள்…
நீலப்புரட்சி திட்டம்-மீன்பண்ணைகள் புதுப்பித்தல் மற்றும் புணரமைத்தல் திட்டம்
மீன்கள் எளிதில் செரிக்ககூடிய மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் புரதம் நிறைந்த அற்புத உணவாகும். சூற்றுச்சூழல் மாசு மற்றும் அதிக மீன்பிடிப்பு காரணமாக இயற்கை நீர்நிலைகளில் மீன்களின் இருப்பு விகிதம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இந்நிலையினை எதிர்கொள்ள வேண்டி நீலப்புரட்சி 2020 என்ற திட்டம் மூலம்,ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு முறை மற்றும் நீர்நிலைகளை ஆக்கபூர்வமாகவும், மீன்விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் நிலையான மற்றும் பாதுகாப்பான மீன்வளர்ப்பு முறையினை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் மாவட்ட மீன்வள்ர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள முகமை உறுப்பினர்கள்…
பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன்விரலிகள் இருப்பு திட்டம்
உள்நாட்டு மீன்உற்பத்தி கடந்த ஆண்டுகளில் பெரும்பாலும் இந்திய பெருங்கெண்டைகள் மற்றும் இதர வகை சிறு கெண்டைகளை சார்ந்து இருந்து வந்தது.இவ்வகை கெண்டை ரகமீன்கள் நீர்நிலைகளில் முழு வளர்ச்சி அடைய அதிக காலம் எடுக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தினை பொறுத்தமட்டில் நீர்நிலைகள் அனைத்தும் நீர் இருப்பு திறன் கொண்டுள்ளதாலும்,மாவட்டத்தின் மீன் உற்பத்தி திறனினை பெருக்கும் நோக்கத்திலும், தமிழ்நாடு மீன்வளத்துறை குறுகிய காலத்தில் அதிக எடை வளரக்கூடிய கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு விரலிகளை கிருஷ்ணகிரி மீன்பண்ணையில் உற்பத்தி செய்து மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் மாவட்ட மீன்வள்ர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். திட்டத்தின் பயனை…
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் (வலை மற்றும் பரிசல்) மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர் / மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டும், அவர்களின் வருமானத்தினை அதிகப்படுத்தும் எண்ணத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 மீனவர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த சுமார் 5000 மீனவர்களுக்கு வலை மற்றும் பரிசல்கள் 50 சதவீதம் மான்யத்தில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினை சார்ந்த பயனாளிகள், அந்தந்த வட்டத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர்கள் / சார் ஆய்வாளர்களை நேரில் சென்று…
சொட்டுநீர் பாசனம் அமைத்தல்
சிறு,குறு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000/- வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ1.50,000/- பெரிய விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.22,500/- வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ1.12,500/- திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் பூர்த்தி செய்த விண்ணப்பம் விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 3 மல்பரி தோட்டத்தில் (லேட்டர்ல், பில்டர்) எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம் தலா 2 சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை,குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா…
நவீன புழு வளர்ப்பு தளவாட பொருட்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்குதல்
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் புழுவளர்ப்பு மேற்கொள்ள புழுவளர்ப்பு தாங்கிகள் 1200 ச. அடிக்கு மேல் அமைத்தல்வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் பூர்த்தி செய்த விண்ணப்பம் விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் மல்பரி தோட்டம், புழு வளர்ப்பு மனையில் எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம் தலா 2 சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள் ரூபாய் 100 மதிப்புள்ள முத்திரைத்தாள் தாங்கிகள் அமைத்ததற்கான இரசிது, அசல் ஆவணங்கள் பயனாளி: புழுவளர்ப்பு மேற்கொள்ள புழுவளர்ப்பு தாங்கிகள் 1200 ச. அடிக்கு மேல் அமைத்தல்வேண்டும் பயன்கள்: நவீன புழுவளர்ப்பு தளவாட பொருட்கள்…
தனி பட்டுப்புழு வளர்ப்புமனை அமைப்பதற்கு வழங்கப்படும் மானியங்கள்
நிலை 1 (1500 ச.அடிக்குமேல்) = 82,500/- நிலை 2 (1000 முதல் 1500 ச,அடிக்குள்) = 87,500/- நிலை 3 (800 முதல் 1000 ச,அடிக்குள்) = 63,000/- திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் புதிதாக தனி புழுவளர்ப்புமனை குறிப்பிட்டுள்ள அளவிடுகளின்படி அமைத்தல் வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் பூர்த்தி செய்த விண்ணப்பம் விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 3 மல்பரி தோட்டம், புழு வளர்ப்பு மனையில் (அடிமட்டம், ஜன்னல் அளவு, முழுஅளவு,உள்பகுதி தலா 2,) எடுக்கப்பட்ட முழு உருவ புகைப்படம். சிட்டா,அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள்…
மல்பரி நடவு மானியம்
ஒரு ஏக்கருக்கு ரூ.10,500/-வீதம் ஒரு பயனாளிக்கு ஐந்து ஏக்கர் வரை வழங்கப்படுகிறது ரூ.52,500/- திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் பூர்த்தி செய்த விண்ணப்பம் விண்ணப்பதாரரின் மார்பளவு புகைப்படம் 2 மல்பரி தோட்டத்தில் எடுக்கப்பட்ட முழுஉருவ புகைப்படம் தலா 2 சிட்டா,அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் தலா 2 நகல்கள் பயனாளி: புதிதாக மல்பெரி நாற்றுக்கள் ஒரு ஏக்கருக்கு 5500 எண்ணிக்கையில் நடவு செய்தல் வேண்டும் பயன்கள்: ஒரு ஏக்கருக்கு ரூ.10,500/-வீதம் ஒரு பயனாளிக்கு…