பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக உற்பத்திபிரிவிற்கு 25 லட்சம் மற்றும் சேவைப் பிரிவிற்கு 10 இலட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.
திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள்
18 வயது பூர்த்தி அடைந்த எவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் அடையலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை ரூ. 5.00 லட்சத்திற்கு மேலான சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கும், ரூ. 10.00 லட்சத்திற்கு மேலான உற்பத்தி சார்ந்த தொழில் திட்டங்களுக்கும் பயனாளி குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்
இத்திட்டத்தில் உற்பத்தி சார்ந்த தொழில் துவங்க ரூ.25.00 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில் துவங்க ரூ.10.00 லட்சம் வரையிலான திட்டங்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. பொது பிரிவு பயனாளிகளுக்கு ஊரக பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 25% மானியமும், நகர் பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 15% மானியமும் வழங்கப்படும். l சிறப்பு பிரிவு பயனாளிகளுக்கு ஊரக பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 35% மானியமும், நகர் பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 25% மானியமும் வழங்கப்படும். 18 வயது பூர்த்தி அடைந்த எவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் அடையலாம்.
மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த தொழில் தொடங்குவதற்கான ஆர்வமுடைய தொழில் முனைவோர்கள் கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று www.kviconline.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பயனாளி:
18 வயது பூர்த்தி அடைந்த எவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் அடையலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை ரூ. 5.00 லட்சத்திற்கு மேலான சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கும், ரூ. 10.00 லட்சத்திற்கு மேலான உற்பத்தி சார்ந்த தொழில் திட்டங்களுக்கும் பயனாளி குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயன்கள்: