Close

மாதம் ஒரு மாமனிதர்

நோக்கம்

  • ஒவ்வொரு மாதமும், அரசு அலுவலர்களில் சிறப்பாக பணிபுரியும் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
  • இதன் மூலம், அலுவலர்களின் அர்ப்பணிப்பு, நேர்மை, மற்றும் சமூக சேவையை பாராட்டி, மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக நிறுத்துகிறது.
  • தேர்வு செய்யும் செயல்முறை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் கீழ், குழு அமைத்து நடத்தப்படுகிறது.
  • ஒவ்வொரு மாதமும் வேறு துறைகளிலிருந்து அலுவலர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

சிறப்பம்சங்கள்

  • அரசு அலுவலர்களின் பணி உற்சாகத்தை உயர்த்துதல்
  • சிறப்பாக பணிபுரியும் அலுவலர்களை பாராட்டுதல்
  • மாவட்ட நிர்வாகத்தில் தரமான சேவை வழங்க ஊக்குவித்தல்

இதனால், ஈரோடு மாவட்டத்தில் அரசு அலுவலர்களின் சேவையை மதித்து, அவர்களை ஊக்குவிக்கும் ஒரு நல்ல நிர்வாக நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

நற்சான்றிதழ் பெற்றோர்
 S.No. மாதம் பெயர் பதவி துறை பணி சிறப்பு புகைப்படம்
1 ஜனவரி 2026 திரு. கு. மணிகண்டன் கணக்கர் கருவூலம் மற்றும் கணக்குத் துறை நீதிமன்ற வழக்குகளை உரிய நேரத்தில் கையாளுதல் மற்றும் IFHRMS பயிற்சிகள் மூலம் அலுவலகங்களுக்கு நல்லுறவு பேணுதல் test
2 பிப்ரவரி 2026 Dr . C. P. அய்யப்பன், DM (Oncology) உதவி மருத்துவர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் AYUSH Onco Wellness Centre தொடங்குதல் மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் சிறப்பான பங்கு. சி.பி. அய்யப்பன்
3 மார்ச் 2026 திருமதி. ர. சாந்தி உதவி இயக்குநர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அரசு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துதல். ர சாந்தி
4 ஏப்ரல் 2026 திருமதி. ம. சுஜாதா வழக்குப் பணியாளர் குழந்தைகள் பாதுகாப்பு அலகு (1098) புகார்களை இரவு-பகல் பாராது கள ஆய்வுகள் செய்து சிறப்பாக பணிபுரிந்தமை. ம சுஜாதா
5 மே 2026 திரு. கந்தசாமி காவல் ஆய்வாளர் காவல் துறை 15-க்கும் மேற்பட்ட போதைப் பொருள் விற்பனையாளர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முக்கிய பங்கு. லெ.கந்தசாமி